For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவாலியே உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற.. இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86), சென்னையில் நேற்று காலமானார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது 6 வயது முதலே இசைக்கச்சேரி செய்யத் தொடங்கினார். 9 வயதில் வாய்ப்பாட்டு மட்டுமின்றி மிருதங்கம், வயலின், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் தேர்ச்சி பெற்ற அவர், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய நாட்டின் உயர்ந்த விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளையும், பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான செவாலியே விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தி குறித்து அறிந்த பிரபலங்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

English summary
Carnatic vocalist, playback singer and composer Mangalamapalli Balamuralikrishna, who burst into the music world as a child prodigy, died on Tuesday. He was 86.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X