For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி... முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார் நாராயணசாமி- வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். இதனால் ஆறு மாதங்களுக்குள் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதிக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,183 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, 18,709 வாக்குகள் பெற்று நாராயணசாமி வெற்றி பெற்றார். இதனால் நாராயணசாமி தனது புதுச்சேரி முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Puducherry chief minister and Congress candidate V Narayanasamy won the Nellithope byelection defeating AIADMK candidate Omsakthi Sekar by 11,183 votes. Narayanasamy polled 18,709 votes while Sekar got 7,565 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X