For Daily Alerts
Just In
திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதியர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி- வீடியோ
சென்னை: திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதியர், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கார்த்திக் ஓட்டுநராக பயணியாற்றி வருகிறார். சிறுவயது முதலே அதிமுக மீதும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதும் தீவிர பற்றுக்கொண்டவர் கார்த்திக். ஜெயலலிதா இறந்த சோகத்தில் மூழ்கிய அவர், இன்று காலை திருமணம் முடிந்தவுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.