For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஏசிஎல் மோசடி... பணம் திரும்பக் கிடைக்காத முதலீட்டாளர்கள் சேலத்தில் முற்றுகைப் போராட்டம்- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றில் தாங்கள் முதலீடு செய்த தொகையை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் இயங்கி வந்த பி.ஏ.சி.எல் என்ற தனியார் நிதி நிறுவனம் அறிவித்தபடி முதலீட்டு பணத்தை திருப்பித்தரவில்லை என்ற புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, முன்னாள் நீதிபதி லோதா அதற்கு தலைவரானார். அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றளவும் தங்களது பணம் திரும்ப கிடைக்கவில்லை எனக் கூறி, சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

English summary
In Salem, the investors of PACL finance company staged a protest in front of district collector office to give back the settlement amount.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X