For Daily Alerts
Just In
தமிழக இடைத்தேர்தல்... 3 தொகுதிகளிலும் வெற்றிமுகம்... ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் அதிமுகவினர்- வீடியோ
சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கும் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என மூன்று தொகுதிகளிலும் ஆரம்பம் முதலே அதிமுகவின் கை ஓங்கி இருந்தது. இதனால், இடைத்தேர்தலில் தங்களது வெற்றி உறுதியான மகிழ்ச்சியை அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் கொண்டாடி வருகின்றனர்.