For Daily Alerts
Just In
ஜெயலலிதாவிற்காக மொட்டை போட்டு இரங்கல்... 3ம் நாள் ஈமச்சடங்கும் செய்த திருப்பூர் அதிமுகவினர்- வீடியோ
திருப்பூர்: சென்னை அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் அதிமுகவினர், மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ஜெயலலிதாவின் படத்திற்கு பால், நெய் போன்றவற்றை ஊற்றியும் அவர்கள் ஈமச்சடங்குகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.