விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 15 நிமிஷம்தான்.. .குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமி.. அலேக்காக வெளியே கொண்டு வந்த இளைஞர்கள்!

3 வயது சிறுமியை இளைஞர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆள்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் குழந்தை.. பத்திரமாக மீட்ட இளைஞநர்கள் - வீடியோ

    விழுப்புரம்: குழந்தை உடம்பெல்லாம் மண்ணு... வெறும் 15 நிமிஷம்தான்.. குழிக்குள் விழுந்த 3 வயது சிறுமியை பக்கத்திலேயே இன்னொரு குழியை தோண்டி பத்திரமாக மீட்டுவிட்டனர் நம் இளைஞர்கள்.. இந்த வீடியோ இப்போது வெளியாகி புல்லரிக்க வைத்துள்ளது.

    புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள பகுதி சின்னபாபு சமுத்திரம்.. இங்கு சரோஜா என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

    அதற்காக 10 அடி ஆழத்தில் போர்வெல் மெஷின் போட ஏற்பாடு நடந்தது.. 10 அடி ஆழம், ஒரு அடி அகலத்துக்கு குழி ஒன்று போடப்பட்டுள்ளது.. ஆனால் போர்வெல் பணி நின்றுவிடவும், அந்த குழியும் அப்படியே உள்ளது.. யாருமே மூடவும் இல்லை.

    அலறல்

    அலறல்

    அப்போது, குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த பாஸ்கர் என்பவரது 3 வயது மகள் கோபிணி, இதில் தவறி விழுந்துவிட்டாள்.. குழிக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சத்தம் வருகிறது, ஆளை காணோமே என்று பதறினர்.. பிறகுதான் குழிக்குள் இருந்து சத்தம் வருகிறது என்று தெரிந்து எட்டி பார்த்தனர்.

    முள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்முள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்

    இரண்டரை அடி உயரம்

    இரண்டரை அடி உயரம்

    சிறுமி உள்ளே சிக்கி கொண்டு இருந்தாள்.. இதை பார்த்து பதறிய மக்கள், மேல் புறமாக கையை விட்டு வெளியே தூக்கி விடலாம் என்று நினைத்தார்கள்.. ஆனால், இரண்டரை அடி உயரம் உள்ள அந்த குழியில், சிறுமியின் கை சிக்கி கொண்டது.. அதனால் அவளை தூக்க முடியவில்லை.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    இருந்தாலும் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வரும்வரை நேரத்தை கடத்தாமல், நாமளே இறங்கி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்யலாமே என்று அந்த பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். அதற்காக குழிக்கு பக்கத்திலேயே பொக்லைனை வைத்து இன்னொரு குழியை தோண்டினர்.

    பாராட்ட

    பாராட்ட

    வெறும் 15 நிமிஷம்தான்.. குழியை தோண்டி, குழந்தையையும் வெளியே பத்திரமாக கொண்டு வந்துவிட்டனர். சுஜித் நமக்கு கற்று தந்த பாடம், இளைஞர்கள் மனதில் கெட்டியாக ஒட்டி கொண்டு விட்டது! இந்த இளைஞர்களுக்கோ பாராட்டு குவிந்தபடியே இருக்கிறது.

    மண் சரிவு

    மண் சரிவு

    அது மட்டுமில்லை.. சுஜித் மீட்பு பணியின்போது, அந்த பள்ளத்தை சுற்றிலும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகத்தான் மண் அதிகமாக அவன் மேல் விழுந்து, மீட்க முடியாமல் போனது.. ஆனால் இந்த குழந்தை சம்பவத்தில் குழிக்குள் மண் விழாதவாறு இந்த ஊர்மக்களே கவனமாக பார்த்து கொண்டனராம்.. அதனால்தான் குழந்தையை வேகமாக மீட்க முடிந்திருக்கிறது. குழந்தையை வெளியே தூக்கும்போது, அவள் உடம்பெல்லாம் மண்.. அந்த ஊரே சிறுமியை அப்படியே வாரி அணைத்து கொண்டது.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது..

    English summary
    villupuram near 3 year old child falling into 10 feet pit and youngster rescued video goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X