விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரம் அருகே குடிபோதை ஆசாமியால் கூலி தொழிலாளி படுகொலை.. பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    விழுப்புரம் அருகே குடிபோதை ஆசாமியால் கூலி தொழிலாளி படுகொலை

    விழுப்புரம் : விழுப்புரம் வளவனூர் அருகே முன்விரோத மோதலில் இளநீர் சீவும் கத்தியால் வெட்டி கூலி தொழிலாளி படு கொலை செய்யப்பட்டார். குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளரும் கத்தியால் தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்துள்ள கெங்கராம்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மகன் தணிகைராஜ்(28). கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகன் அய்யனார்(33). இவர்கள், அப்பகுதியில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்வதும், மோதலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது, வளவனூர் காவல் நிலையத்தில் வழக்குகளும் உள்ளன.

    இந்த நிலையில், இளநீர் வியாபாரம் செய்து வரும் ஐயனார், இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, கத்தியை வைத்துக்கொண்டு அவ்வப்போது பொது மக்களை மிரட்டி வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இந்த வகையில், சனிக்கிழமை மாலை மது அருந்திவிட்டு வந்த அவர், கெங்கராம்பாளையம் காலனி பகுதியில், இளநீர் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு, சாலையில் செல்வோரை மிரட்டி வந்துள்ளார்.

    தமிழக காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூ. 350 கோடி ஊழல்.. ஸ்டாலின் பரபர புகார்தமிழக காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூ. 350 கோடி ஊழல்.. ஸ்டாலின் பரபர புகார்

    வெட்டிய அய்யனார்

    வெட்டிய அய்யனார்

    அப்போது, முன்விரோதம் காரணமாக தணிகைராஜ் வீட்டுக்குச் சென்ற ஐயனார், வீட்டிலிருந்த அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில், இளநீர் சீவும் கத்தியால், தணிகைராஜை திடீரென வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தணிகைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பிடித்த போது விபரீதம்

    பிடித்த போது விபரீதம்

    இதனையடுத்து, கத்தியுடன் பொது மக்களை விரட்டியபடி, அய்யனார் சாலையில் திரிந்துள்ளார். தகவல் அறிந்த வளனூர் உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று, அவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, கத்தியால் தாக்கியதில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் கையில் வெட்டு விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றார்.

    அய்யனார் சிக்கினார்

    அய்யனார் சிக்கினார்

    இதனையடுத்து, போலீஸார் அய்யனார் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து, தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி ஜெ.சங்கர், வளவனூர் காவல் ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் போலீஸார் விரைந்து சென்று, கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    புதுவை மாநில எல்லைப் பகுதியான, கெங்கராம்பாளையத்தில் கொலை நடந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, அய்யனார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    A mercenary worker murdered by a drug addict person near Villupuram. Sup inspector also attacked by drug addict person
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X