விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமதாசுடன் கைகோர்க்கும் கருணாஸ்... தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பு

Google Oneindia Tamil News

விழுப்புரம்: நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் எம்.எல்.ஏ. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது திரெளபதி படத்தில் நடித்தது, நடப்பு அரசியல், 2021 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி இருவரும் மனம்விட்டு பேசியிருக்கிறார்கள்.

மேலும், வரும் தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ.வாக விரும்பும் கருணாஸ் அது பற்றி ராமதாசிடம் ஆலோசனைகள் கேட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்-ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம் மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்-ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம்

எம்.எல்.ஏ. பதவி

எம்.எல்.ஏ. பதவி

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதாவே அழைத்து கருணாசுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தார். இதற்கு காரணம் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் மீது ஜெயலலிதா அப்போது கடுமையான கோபத்தில் இருந்தார். அதேபோல் பார்வார்டு பிளாக் கதிரவன் மீதும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை. இதனால் கருணாஸை தேடி அதிர்ஷ்டம் வந்தது. சீட்டும் கிடைத்தது கூடவே கடந்த 4 ஆண்டுகளாக பணமும் சேர்ந்தது.

திடீர் திடீர்

திடீர் திடீர்

சத்யராஜ் படத்தில் வரும் ''என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்ர'' என்ற வசனத்தை போல் கருணாஸ் தனது நிலைப்பாட்டை கடந்த 4 ஆண்டுகளில் திடீர் திடீரென மாற்றியுள்ளார். ஆரம்பத்தில் சசிகலா டிடிவி தினகரனின் ஆதரவாளராக காட்டிக்கொண்ட கருணாஸ், பின்னர் திமுகவுடன் நெருக்கம் காட்டினார். அண்ணா அறிவாலயத்தில் திமுக நடத்திய போட்டி சட்டமன்றக் கூட்டத்தில் கூட கலந்துகொண்டார். பின்னர் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். அண்மையில் கூட குடும்பத்தினருடன் சென்று முதல்வரிடம் வாழ்த்து பெற்று வந்தார். இப்படி திடீர் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றுபவர் கருணாஸ்.

ஆலோசனை

ஆலோசனை

அதிமுக மீண்டும் கருணாசுக்கு எம்.எல்.ஏ.சீட் கொடுக்குமா எனத் தெரியவில்லை, அது உறுதியும் இல்லை. ஆனால் கருணாஸை பொறுத்தவரை மீண்டும் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என விரும்புகிறார். அதற்கான ஆலோசனைகளிலும், முன்னெடுப்புகளிலும் அவர் இப்போதே ஈடுபடத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை இன்று அவரது தைலாபுரம் தோட்டத்திற்கே சென்று சந்தித்து பேசியுள்ளார்.

நடப்பு அரசியல்

நடப்பு அரசியல்

அண்மையில் வெளியான திரெளபதி படத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்து பாராட்டிய ராமதாஸ் கருணாஸிடம் அவரது நடிப்பு பற்றி இன்று நேரில் பாராட்டியிருக்கிறார். மேலும், நடப்பு அரசியல் பற்றியும், தொகுதிகளின் நிலவரம் பற்றியும் இருவரும் பேசியிருக்கிறார்கள். ராமதாஸ் சிபாரிசில் மீண்டும் அதிமுகவில் கருணாஸ் சீட் கேட்பார் எனத் தெரிகிறது.

English summary
actor karunas mla joining hands with Ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X