விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: 21 ஆண்டுகளுக்கு பிறகு, பாமக முன்னாள் தலைவர் தீரன் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

பாமகவில் தலைவராக இருந்தவர் பேராசிரியர் தீரன். சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாளராகச் செயல்பட்டதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் தினகரன் பற்றி விமர்சிக்காமல் மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்ததாகவும், இதனால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

After 21 years, Professor Dheeran joined PMK

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேராராசியர் தீரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தனர்.

சுமார் 6 மாத காலம் பேராசிரியர் தீரன் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். பாமகவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் விரைவில் பாமகவிற்குத் திரும்புகின்றனர் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், பேராசிரியர் தீரன் மீண்டும் இணைந்துள்ளார்.

வன்னியர்சங்கம் தொடங்கிய காலம் முதல் பாமகவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் பேராசிரியர் தீரன் என்றும், 21 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை பிரித்த் காலம் மீண்டும் ஒன்று சேர்த்துவிட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமே...அட்டகாசம், அமர்களம்.. என் கே பி படத்திற்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன ஆரம்பமே...அட்டகாசம், அமர்களம்.. என் கே பி படத்திற்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

பேராசிரியர் தீரன் கூறுகையில், நான் பணியாற்ற வேண்டிய இடம் பாமக தான் என்பதை உணர்ந்து கட்சியில் இணைந்துள்ளேன். அன்புமணியை முதல்வராக்குவோம் என்ற லட்சியத்துடன் என் செயல்பாடுகள் இருக்கும் என்றார்.

English summary
21 years later, Professor Dheeran rejoined PMK, In the presence of PMK founder Ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X