விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்!

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விக்கிரவாண்டியில் பேசி இருக்கிறார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் கடந்த மாதம் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார்.

அந்த ஒரு டர்ன் இருக்கே.. அதுதான்.. ரஜினியின் அரசியல் பேட்டியில் இதை கவனித்தீர்களா?அந்த ஒரு டர்ன் இருக்கே.. அதுதான்.. ரஜினியின் அரசியல் பேட்டியில் இதை கவனித்தீர்களா?

பேசினார்

பேசினார்

முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். அதிமுக ஆட்சிதான் தொடர போகிறது.

அரசியல் எப்படி

அரசியல் எப்படி

அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது எளிமையான விஷயம் கிடையாது. அரசியலில் கால் வைத்து நிற்பது கடினம். அதிமுகவின் கூட்டணி மிகப்பெரியது, எங்கள் கூட்டணியை யாராலும் நெருங்க முடியாது.

சட்டசபை இடைத்தேர்தல் முடிவு

சட்டசபை இடைத்தேர்தல் முடிவு

சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் கோட்டையிலும், திமுக கோட்டையிலும் அதிமுக வென்றுள்ளது. எங்கள் கட்சியில் வெற்றிடம் இல்லை, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

சான்றிதழ்

சான்றிதழ்

எங்கள் ஆட்சிக்கு சான்றிதழ் கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சோதனைகளை சந்தித்தோம். எங்கள் ஆட்சிக்கு நிறைய நெருக்கடி வந்தது. திமுகவின் திட்டங்களை எல்லாம் மக்கள் தோல்வி அடைய செய்துவிட்டார்கள்.

ஆட்சி கவிழும்

ஆட்சி கவிழும்

இப்போது ஆட்சி கவிழும், அப்போது ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.ஆனால் ஸ்டாலினின் கனவை மக்கள் தவிடு பொடியாக்கிவிட்டார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் அதேபோல் தமிழக சட்டசபை தேர்தலிலும் 2021ல் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று முதல்வர் பழனிசாமி பேசி இருக்கிறார்.

English summary
AIADMK will win in the next election too says Tamilnadu CM Palanisamy in Vikravandi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X