விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெபாசிட் பணத்திலிருந்து ரூ 500- ஐ எடுத்த மனைவி.. மனுதாக்கல் செய்ய முடியாமல் திரும்பிய வேட்பாளர்

Google Oneindia Tamil News

Recommended Video

    500 ரூபாயை செலவு செய்த மனைவி... ஏமாற்றம் அடைந்த சுயேட்சை வேட்பாளர்

    விழுப்புரம்: வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேர்த்து வைத்த பணத்தில் ரூ. 500-ஐ காய் வாங்க மனைவி எடுத்துவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஏமாற்றமடைந்தார்.

    தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

    எனினும் ஒவ்வொரு தேர்தலின் போதும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவது வழக்கம். இவர்களில் செல்வாக்கு இருப்பவர்கள் மற்ற பிரதான கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஜெயித்த வரலாறுகளும் உண்டு.

    இந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கைஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

    ரூ 12500

    ரூ 12500

    இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த அரசன். இவர் தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக ரூ. 12500-ஐ எப்படியோ வயிற்றை கட்டி வாயை கட்டி சேர்த்து வைத்திருந்தார்.

    டெபாசிட் நீட்டிய அரசன்

    டெபாசிட் நீட்டிய அரசன்

    அதை எடுத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் 35 கி.மீ. தூரம் நடந்தே சென்றுள்ளார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அவர்கள் கேட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்தார். இதையடுத்து டெபாசிட் தொகையை அதிகாரி கேட்டார்.

    ரூ. 500 குறைவு

    ரூ. 500 குறைவு

    அப்போது தன்னிடம் இருந்த பணத்தை அரசன் கொடுத்துள்ளார். அதை எண்ணி பார்த்த அதிகாரி ரூ .500 குறைவாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் பதறிய அரசன் அந்த பணத்தை பெற்று மீண்டும் எண்ணிப் பார்த்தார். அப்போதும் ரூ. 500 குறைவாகத்தான் இருந்தது.

    வேதனை

    வேதனை

    இதையடுத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த அவர் தனது வீட்டுக்கு சென்று மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போதுதான் அந்த பணத்திலிருந்து ரூ. 500-ஐ மனைவி எடுத்தது தெரியவந்தது. மனைவி தெரியாமல் செய்த தவறால் தன்னால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாமல் திரும்பிய சம்பவம் அவருக்கு வேதனையை அளித்தது.

    English summary
    An Independent candidate from Villupuram returns without filing nomination as his wife takes Rs 500 from the election deposit amount. Without knowing this, he takes the remaining amount for nomination.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X