விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு நான் புதுப் பேரு வச்சிருக்கேன்.. அதை தவிர வேற ஒன்னையும்.. அன்புமணி அட்டாக் பேச்சு

முக ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் சரமாரியாக விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிரவாண்டியில் திமுக தலைவரை விமர்சித்த அன்புமணி- வீடியோ

    விக்கிரவாண்டி: "நான் ஸ்டாலினுக்கு ஒரு புது பேரு வெச்சிருக்கேன்.. என்னன்னு தெரியுமா.. புளுகுமூட்டை ஸ்டாலின்னு.. வாயை திறந்தா பொய்.. வேற ஒன்னையும் கிழிக்க முடியாது" என்று அன்புமணி ராமதாஸ் சரமாரியாக திமுக தலைவரை விமர்சித்துள்ளார்.

    விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வாக்குகூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுகவையும், அக்கட்சி தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இங்கே நாம வெற்றி பெற்றே ஆகவேண்டும். வெற்றி பெற்று ஸ்டாலின் முகத்தில் நாம கரியை பூசணும். இந்த தேர்தல் நமக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போட்டி... ஸ்டாலினுக்கு நான் ஒரு புது பெயர் வைத்திருக்கிறேன். என்ன பேரு தெரியுமா.. புளூகுமூட்டை ஸ்டாலின்!

    தள்ளுபடி

    தள்ளுபடி

    வாயை திறந்தாலே பொய்.. பொய்யை தவிர வேற எதுவுமே தெரியாது. போன மக்களவை தேர்தலில், அவ்வளவு பொய்யை சொன்னார். அவர் சொன்ன முக்கியமான ஒரு பொய், நாங்கள் வெற்றி பெற்றால், நகைக்கடன் தள்ளுபடி செய்வோம்ன்னு சொன்னார். எங்கியாச்சும் இதை தள்ளுபடி செய்திருக்கிறாரா?

    வாக்குறுதி

    வாக்குறுதி

    தமிழ்நாடு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. 39 மக்களவை தேர்தலில் 38 வெற்றார். மிகப்பெரிய வெற்றி... அவர் சொன்ன வாக்குறுதி, நாங்கள் வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பதுதான். இதுவரைக்கும் இல்லை.. அவரால்தான் இப்படி தள்ளுபடி செய்ய முடியுமா? அவரால எதுவுமே கிழிக்க முடியாது.

    புளுகுமூட்டை

    புளுகுமூட்டை

    அதேபோல, அவர் சொன்ன வார்த்தை விவசாய கடனை தள்ளுபடி செய்வோம், கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம், இதையாவது செய்திருக்கிறாரா? ஒன்னும் செய்யல.. ஆக அவர் சொல்ற எல்லா வார்த்தையுமே பொய்.. புளுகுமூட்டை ஸ்டாலின்.

    15 கோடி ரூபாய்

    15 கோடி ரூபாய்

    கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட மூன்று கூட்டணி கட்சியினருக்கு, ரூ.50 கோடி அளவில் தேர்தல் நிதியென பெட்டி பெட்டியாக லஞ்சம் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், பாமகவை விமர்சிக்கிறார். 30 ஆண்டுகள் நேர்மையான அரசியல் செய்கிறோம். ஒரு மக்களவைத் தொகுதிக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம்தான் செலவு நிர்ணயம் இருக்கு. ஆனா, 2 தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டுக்கு ரூ.15 கோடி கொடுத்துள்ளனர்.

    காவிரி டெல்டா

    காவிரி டெல்டா

    சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து, வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறோம். இத்திட்டத்தை சட்டப் பேரவையில் ஆதரித்த ஸ்டாலின், பிறகு வெளியே வந்து எதிர்க்கிறார். திமுக - காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர், கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக ஆட்சியில், நீட் தேர்வுக்கு அடிகோலியதும், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைந்ததும் இவங்க ஆட்சியில் தான்.

    பாடம் புகட்டுவர்

    பாடம் புகட்டுவர்

    ஆனால், இத்திட்டங்களையெல்லாம் எதிர்த்து தேர்தலின் போது பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் உறுதியளித்த நந்தன்கால்வாய் திட்டத்தை இன்னைக்கு வரைக்கும் செயல்படுத்தவில்லை. இதெற்கெல்லாம் இந்த இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
    இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால், பல திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வார்கள். எதிர்கட்சி வெற்றி பெற்றால் பயனிருக்காது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்களால் பயனில்லை" என்றார்.

    English summary
    in vikkiravandi campaign, pmk mp anbumani ramadoss slams dmk and attacks mk stalin and his false promises
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X