விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பா.ம.க.இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை... அதிமுகவுக்கு ஹைவோல்ட் ஷாக் தந்த அன்புமணி

Google Oneindia Tamil News

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது அதிமுக தலைமைக்கு ஹை வோல்ட் ஷாக் கொடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.

பாமகவுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உரிய மரியாதை தராதது தமக்கு வருத்தம் தருவதாக அன்புமணி கூறினார்.

அடுத்த பகீர்.. பல் டாக்டரையும் விட்டு வைக்காத நித்யானந்தா.. கோர்ட்டுக்கு வந்த வயதான தாய்!அடுத்த பகீர்.. பல் டாக்டரையும் விட்டு வைக்காத நித்யானந்தா.. கோர்ட்டுக்கு வந்த வயதான தாய்!

சிறப்பு பொதுக்குழு

சிறப்பு பொதுக்குழு

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ் வழக்கத்திற்கு மாறாக கூட்டணிக் கட்சியான அதிமுக மீது கடுமையாக சீறினார். தனது மனதில் இருந்த அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார்.

பாமக கூட்டணி

பாமக கூட்டணி

மேலும், பாமக கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சியில் இல்லை என்றும், இடைத்தேர்தலில் அதிமுக கேட்டுக்கொண்டதால் அப்போது எம்.எல்.ஏ.சீட்களை விட்டுக்கொடுத்ததாகவும், ஆனால் உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு சீட், அரை சீட், கால் சீட் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தருவது தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக தெரிவித்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அன்புமணி ராமதாஸின் பேச்சை அதிமுக சற்று மிரட்சியுடன் தான் பார்க்கிறது. அதிமுகவை நம்பி தாங்கள் இல்லை என்றும், தங்களை நம்பித்தான் அதிமுக உள்ளது எனவும் அன்புமணி ராமதாஸ் சூசகமாக நேற்று சுட்டிக்காட்டிவிட்டார். மொத்தத்தில் அன்புமணியின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும் ஹைவோல்ட் ஷாக் கொடுத்துள்ளது.

உற்சாகம்

உற்சாகம்

உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட அதிமுக மாவட்டச் செயலாளர்கள் சீட் தராததால் பாமக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், அன்புமணியின் சுரீர் பேச்சு அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

English summary
anbumani ramadoss says, there is no AIADMK regime without the pmk alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X