விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சியில் நடந்த திட்ட முறைகேடுகள்.. விசாரணையை தொடங்கும் திமுக அரசு.. அமைச்சர் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்ட முறைகேடுகள் குறித்து, உரிய விசாரணை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்

ஜெயலலிதா பல்கலைக்கழகம், பேருக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டு பெயர் பலகை மட்டும் வைத்துள்ளனர். அதற்குப் பிறகு அதை செயல்படுத்தவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊள்ளாட்சித் துறை சார்பில் நிறைவடைந்த பணிகளை பார்வையிட்டு, புதிய பணிகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்,மற்றும் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

குளறுபடிகள்

குளறுபடிகள்

இதைத் தொடர்ந்து, கக்கனூர் கிராமத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவர் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டகளில் குழப்பம், குளறுபடிகள் உள்ளன. இந்த முறைகேடுகள் குறித்து, உரிய விசாரணை நடத்தி, விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெருநகரங்களுக்கு நிகராக, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தினக்கூலி

தினக்கூலி

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதற்காக, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு, இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினர் சுயமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 273 ரூபாயாக உள்ள தினக்கூலி, விரைவில் 300 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம்

ஜெயலலிதா பல்கலைக்கழகம்

இதற்கிடையில் செய்தியாளர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பதிலளித்துப் பேசினார். அப்போது, அவர் கூறுகையில், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜெயலலிதா பல்கலைக்கழகம், பேருக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டு பெயர் பலகை மட்டும் வைத்துள்ளனர்.அதற்குப் பிறகு அதை செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையில்லாத ஒன்றாகும்.

உயர் கல்வி

உயர் கல்வி

இந்தப் பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைத்ததை அனைவரும் விரும்புவார்கள்.ஏனெனில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பது பாரம்பரியம் மிக்க, மிகப்பெரிய பல்கலைக் கழகம் ஆகும். அந்த வகையில், உயர் கல்வி வளர்ச்சிக்காக, பெயரளவில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

 பெயர் மட்டும் வைப்பார்கள்

பெயர் மட்டும் வைப்பார்கள்

இதையடுத்து, எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத வகையில், உயர்கல்வித் துறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுகவினருக்கு பெயர் மட்டுமேதான் வைக்கத் தெரியும். எதையும் செயல்படுத்த தெரியாது. திமுக ஆட்சியில் தான் விழுப்புரம் மாவட்டத்திற்கு, அரசு பொறியியல் கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி ,உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கொண்டுவந்தது" இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்
நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் கோபால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சமணன் உடனிருந்தனர்.

English summary
tamilnadu Minister periyakaruppan said that Appropriate inquiry into project irregularities during last AIADMK regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X