விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: வயசானவர்களை மட்டுமே குறி வைப்பதுதான் நவீன்குமாரின் வேலை... தாத்தா, பாட்டிகள் சிக்கினால் அம்பேல்தான்!

திருவண்ணாமலை மாவட்டம் எறும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். பணம் பறிப்பதில் கில்லாடி இவர். ஏடிஎம் மையங்களில் போய் நின்று கொள்வார். அங்கு வரும் வயதானவர்களை நோட்டமிடுவார்.

ATM card money robbery and one arrested near Arakkonam

விஷயம் தெரியாதவர்கள் என்றால், அருகில் சென்று உதவுவது போல நடிப்பார். ஏடிஎம் கார்டை வாங்கி, ரகசிய நம்பரையும் கேட்டு பட்டனை அழுத்துவது போல பாசாங்கு செய்வார்.

பிறகு பணம் வரவில்லையே, இந்தாங்க உங்க கார்டு என்று திருப்பி தரும்போது, ஏற்கனவே கையில் தயாராக வைத்திருக்கும் டூப்ளிகேட் கார்டை தந்துவிடுவார். வயதானவர்களும் அந்த போலி கார்டை வாங்கி கொண்டு ஏமாற்றத்துடன் சென்றுவிடுவார்கள். இதன்பிறகு, ஒரிஜினல் கார்டை வைத்து வேறு ஏடிஎம் சென்று பணம் எடுத்து கொண்டு தப்பிவிடுவார் நவீன்குமார்.

எப்பவுமே இதே பொழப்பாக இருந்ததால்தான், நவீன்குமார் மீது நிறைய வழக்குகள் பதிவாகி, இவரை போலீசார் தேடி வந்திருக்கிறார்கள். இந்நிலையில், அவலூர்பேட்டையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில், தேவிகா என்ற பெண்ணை ஏமாற்றி 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதாக போலீசாருக்கு புகார் வரவும், உடனடியாக சென்று போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சிக்கவும், சுதாரித்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் நவீன்குமார் என்பது உறுதியானது. விசரணையில், இந்த ஒரு வருஷத்தில் மட்டும் 5 லட்சம் ரூபாய்க்குமேல இப்படியே கொள்ளை அடித்து வைத்திருக்கிறார் நவீன்குமார். இப்போதைக்கு 2.25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் நவீன்குமாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Young Man arrested for ATM Money Robbery near Arakkonam and 2.25 lakh money seized from him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X