விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 கண்கள்.. 2 தலைகள்.. கருப்பு நிறம்.. நம்புங்க சார் இது கன்றுக் குட்டிதான்!

4 கண்கள், 2 தலைகளுடன் அதிசய கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: நான்கு கண்கள், 2 தலைகள் உள்ளன.. என்று கருப்பு நிறத்தில் உள்ளது!! கன்றுக்குட்டிதான்!!

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஆசனூர் ரோட்டில் கதிர்வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டில் பசு மாடு ஒன்றினையும் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த பசுமாடு சினை ஆனது. நேற்றிரவு அது தனது குட்டியையும் ஈன்றது. இந்த குட்டி பார்க்கவே விசித்திரமாக உள்ளது. 4 கண்களும் 2 தலையுடனும் அந்த கன்று குட்டி பிறந்துள்ளது.

Calf born with 2 head and 4 eyes near Vizhupuram Dist.,

இப்படி ஒரு கன்றுக்குட்டி பிறந்திருப்பது சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பரவியது. அதனால் கதிர்வேலு வீட்டுக்கு படையெடுத்து வந்து, பசுவையும், கன்றுவையும் பார்த்து விட்டு செல்கிறார்கள்.

செல்போனிலும் கன்றுக்குட்டியை ஆர்வத்துடன் படம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் அதிர்ச்சி கலந்த பயமும், ஆர்வம் கலந்த சந்தோஷமும் மாறி மாறி வந்து போகிறது.

Calf born with 2 head and 4 eyes near Vizhupuram Dist.,

பொதுவாக, இதுபோன்று பிறப்பதற்கு மரபணுவின் திடீர் மாற்றமே காரணம் என்று கூறப்படும். அதனால் இவ்வாறு அதிசயமாக பிறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் பெரும்பாலும் உயிரிழந்து விடும். ஆனால் இந்த கன்று குட்டி பார்த்தால் அப்படி தெரியவில்லை. தாயும் - சேயும் நலம் என்று கதிர்வேலுவே சொல்லி விட்டார்!!

English summary
Calf born with 2 head and 4 eyes near Vizhupuram Dist.,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X