விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு

தேமுதிக - பாமக நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி அடித்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ள

Google Oneindia Tamil News

Recommended Video

    Clash between DMDK and PMK Party

    விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி அடித்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பாமக தரப்பில் ஒரு எரிச்சல் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தது. இதற்கு காரணம், வட மாவட்டங்களில் விஜயகாந்த்துக்கும் ஓரளவு செல்வாக்கு இருந்ததுதான்.. இப்போதும் அது இருப்பதுதான்!

    அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போதே ஏகப்பட்ட ஈகோ தேமுதிக தரப்பில் வெளிப்பட்டது.. இப்போதுகூட இவர்கள் ஒரே கூட்டணியில் இருந்தாலும், புகைச்சல் ஓவராக இருந்து கொண்டே இருக்கிறது. விக்கிரவாண்டியில் பாமகவுக்கு ஒரு வலுவான செல்வாக்கு இருக்கிறது என்றால், தேமுதிகவுக்கும் ஓரளவு உள்ளது உண்மையே.

    தேசத்தின் 'மகன்' மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சைதேசத்தின் 'மகன்' மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை

    கூட்டணி தர்மம்

    கூட்டணி தர்மம்

    அதற்காகத்தான் விஜயகாந்த்தை விட்டுக்கொடுக்காமல், அமைச்சர்கள் வீடு தேடிச் சென்று சென்று ஆதரவு தரும்படி கேட்டு கொண்டனர். அதன்படியே பிரேமலதாவும், கடைசி நாளன்று விஜயகாந்தும் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஒருவருக்கொருவர் ஆகாது என்றாலும், கூட்டணி தர்மத்தை இரு கட்சி தலைவர்களுமே காப்பாற்றி அதன்படி நடந்து கொண்டனர். ஆனால், தொண்டர்களுக்கு இது புரியவில்லை போலும்!

    மோதல்

    மோதல்

    இன்று பலமான பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடந்த நிலையில், விக்கிரவாண்டியில் பாமக, தேமுதிக தரப்பினர் பலமாக மோதிக் கொண்டனர். கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.

    சமாதானம்

    சமாதானம்

    விஷயம் இதுதான்.. தேமுதிகவின் சேகர் மற்றும் பாமகவின் மணிகண்டன் இருவரிடையே பணம் பங்கிட்டுக்கொள்வதில் இந்த தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் கைகலப்பு வரை சென்றுவிட்டனர்.. இதனால் தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் போலீஸார் தலையிட்டு விலக்கி விட்டனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    நடக்கும் தேர்தல் அதிமுக - திமுக இடையேதான் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள இரு கட்சியினருமே மோதிக் கொண்டுள்ளது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அந்த பகுதியில் பரபரப்பும் நிலவுகிறது.

    English summary
    clash between pmk and dmdk executives in vikkiravandi constitution over money distributing issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X