விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக!

பணத்தை பங்கு போடுவதில் தேமுதிக - பாமக இடையே மோதல் ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    Clash between pmk and DMDK | சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு !

    விழுப்புரம்: "வெறும் 30%... நாங்க தான் அதிகமாக உழைச்சோம்.. பணம் தர முடியாது" என்று பாமக நிர்வாகிகள் சொன்னதுதான், தேமுதிக தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.

    நேற்று பலமான பாதுகாப்புடன் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில், தேமுதிக, பாமக ஒருவருக்கொருவர் ஆகாது என்றாலும், கூட்டணி தர்மத்தை இரு கட்சி தலைவர்களுமே காப்பாற்றி அதன்படி நடந்து கொண்டனர். ஆனால், இரு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மனநிலை அப்படி இல்லை.

    clash between pmk and dmk cadres in vikravandi

    நேற்று விக்கிரவாண்டியில் பாமக, தேமுதிக தரப்பினர் பலமாக மோதிக் கொண்டனர். கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் தேமுதிக, பாமக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். தேமுதிகவின் சேகர் மற்றும் பாமகவின் மணிகண்டன் இருவரிடையே பணம் பங்கிட்டுக்கொள்வதில் இந்த தகராறு எற்பட்டதாக சொல்லப்பட்டது. கைகலப்பு வரை சென்றுவிட்டனர்.. இந்த சண்டையை போலீஸ் தலையிட்டு விலக்கி விட்டாலும், இந்த மோதல் சம்பவம் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது.

    சட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்புசட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு

    பிரச்சினை இதுதானாம்.. நேற்று மதியம் சாப்பாட்டு நேரத்தில், அதிமுக தரப்பில் பூத் பணிக்கான பணத்தை பாமகவினரிடம் தரப்பட்டு, எல்லாரும் சமமாக பிரித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உடனே தேமுதிகவினர், எங்களுக்கு சமமாக பணத்தை பிரிச்சு தாங்க என்று கேட்டனர். இதற்கு பாமகவினர் மறுத்துள்ளனர். "நாங்கதான் அதிகமாக உழைச்சோம்.. சமமா பணத்தை தர முடியாது.. வேணும்னா 30% தர்றோம்" என்றனர்.

    clash between pmk and dmk cadres in vikravandi

    "இப்போ நீங்க சமமா பிரிக்கலைன்னா, நடக்கறதே வேற" என்று தேமுதிக தரப்பு சொல்லவும், அப்போதுதான் கைகலப்பு ஆரம்பமாகி.. கடைசியில் சட்டை கிழியும் வரை சென்றுவிட்டது. இப்படி ஒரு கைகலப்பு அதிமுக கூட்டணிக்கு பெரிய தலைகுனிவை தந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

    English summary
    by election 2019: clash between pmk and dmk cadres in vikravandi to sharing money equally
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X