விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரத்தில் மீன் வியாபாரிக்கு கொரோனா.. வாங்கி சாப்பிட்டவர்கள் பீதி.. மார்க்கெட்டுக்கு சீல்!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மீன் வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், விழுப்புரம் நகரம் முழுவதும் ஒரு வாரத்திற்கு மீன் விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    விழுப்புரத்தில் மீன் வியாபாரிக்கு கொரோனா... பீீதியில் மீன் சாப்பிட்டவர்கள்

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 2,400 போ் கண்டறியப்பட்டு, வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா். இதேபோல் டில்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று மத மாநாட்டிற்கு சென்று திரும்பியவா்கள் 79 போ் கண்டறியப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனா்.

    Chief Minister V.Narayanasamy launched new food scheme

    இவா்களில், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விழுப்புரம் சிங்காரத்தோப்பு, பாணாம்பட்டு பகுதிகளைச் சோ்ந்த இருவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தனா்.

    Chief Minister V.Narayanasamy launched new food scheme

    இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 போ் குணமடைந்து நேற்று வீடு திரும்பினா். இவா்கள் அனைவரும் டில்லி மத மாநாட்டிற்கு சென்று திரும்பியவா்கள். மேலும் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள், வீடுகளில் 10 நாட்கள் உரிய இடைவெளியை கடைப்பிடித்து தனிமையில் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Chief Minister V.Narayanasamy launched new food scheme

    இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த 52 வயதான மீன் வியாபாரிக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அவரிடம் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை, கண்டறிந்து மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து விழுப்புரம் மீன் மார்க்கெட் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

    Chief Minister V.Narayanasamy launched new food scheme

    மேலும் விழுப்புரம் நகரம் முழுவதும் மீன் விற்பனைக்குத் ஒரு வாரத்திற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் நகரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் அனைத்து சிக்கன், மட்டன் என அனைத்து வகையான இறைச்சி கடைகள் மற்றும் மீன் விற்பனைகளுக்கு தடை. மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Corona virus infection has been confirmed to the fish dealer at Villupuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X