விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா அச்சம்.. சீனாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர பரிசோதனை.. விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 03-02-2020 | oneindia tamil Morning news

    விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் எல்லோரும் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது.

    சீனா மொத்தமாக கொரோனா வைரஸ் காரணமாக குலை நடுங்கிப் போய் உள்ளது. இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 361பேர் பலியாகி உள்ளனர். 17201பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை.. 361ஐ தொட்டது.. ஒரே நாளில் 57 பேர் பலி.. கொரோனா கொடூரம்! கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை.. 361ஐ தொட்டது.. ஒரே நாளில் 57 பேர் பலி.. கொரோனா கொடூரம்!

    வைரஸ் தாக்குதல்

    வைரஸ் தாக்குதல்

    இந்த வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இன்னும் பரவவில்லை. திருவண்ணாமலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது. இவர்கள் இருவரும் சமீபத்தில் சீனா சென்று விட்டு திரும்பியவர்கள். இவர்களுக்கு தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், இவர்களுக்கு நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

    எப்படி விழுப்புரம்

    எப்படி விழுப்புரம்

    இந்த நிலையில் விழுப்புரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. இவர் சீனாவில் படித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வைரஸ் காரணமாக அங்கிருந்து மக்கள் பலர் வெளியேறினார்கள். அவர்களுடன் விழுப்புரத்தை சேர்ந்த இளம்பெண்ணும் தமிழகம் திரும்பினார். தமிழகம் வந்தவர், முதல் ஒரு வாரம் நன்றாக இருந்து உள்ளார் .

    என்ன காய்ச்சல்

    என்ன காய்ச்சல்

    இந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு காய்ச்சல் ஏற்பட்டது. சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார். சமயத்தில் இவரை சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். இவரை தனி அறையில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    ஏற்கனவே கேரளாவில் இதுவரை இரண்டு பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டார். இவர் சீனாவில் படித்து வந்தவர். வுஹன் நகரத்தில்தான் இவர் படித்து வந்தார். இரண்டு வாரம் முன் இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா தமிழக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: A woman in Villupuram admitted in hospital with the symptoms today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X