விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 13 மணி நேரம்தான்.. ஒரே இரவில் 39 பேருக்கு கொரோனா.. சத்தமின்றி விழுப்புரத்தில் நடந்த அவலம்!

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் அடுத்தடுத்து 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் 100 கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2757ல் இருந்து 3,023 ஆக உயர்ந்தது.

சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்தது. விழுப்புரத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வெறும் 6 மாதம்தான்.. 35 லட்சத்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை.. விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா வைரஸ்! வெறும் 6 மாதம்தான்.. 35 லட்சத்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை.. விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா வைரஸ்!

விழுப்புரம் நிலை

விழுப்புரம் நிலை

விழுப்புரத்தில் நேற்று முதல் நாள் மாலை வரை 53 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது. அங்கு 27 பேர் வரை குணப்படுத்தப்பட்டு இருந்தனர். இதனால் அங்கு 26 பேர் மட்டுமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் விழுப்புரத்தில் இன்னும் 20 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் எல்லாம் மொத்தமாக தற்போது தலைகீழாகி உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்

இதற்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் சென்னையில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட் இன்னொரு எபிசென்டராக மாறி உள்ளது. ஒரு பகுதியில் பலருக்கு கொரோனா ஏற்பட்டு, அவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியாத நிலை ஏற்பட்டு, அந்த பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு கொரோனா பரவினால் அதுதான் எபிசென்டர் ஆகும். சீனாவில் வுஹன் மார்க்கெட் எபிசென்டர் என்ற நிலையில்தான் இருந்தது.

வுஹன் நிலை

வுஹன் நிலை

ஆனால் போக போக அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு ஒரு நோயாளிகள் கூட இல்லை. தற்போது கோயம்பேடு மார்க்கெட் எபிசென்டராக மாறியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த 85 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து லோட் ஏற்றிக்கொண்டு வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள், லாரியில் லோட் அடித்தவர்கள் என்று 112 பேர் வரை தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மீண்டும் உயர்கிறது

மீண்டும் உயர்கிறது

தமிழகத்தில் குறைய வேண்டிய கொரோனா கிராபை மொத்தமாக மீண்டும் கோயம்பேடு உயர்த்த தொடங்கி உள்ளது. தற்போது விழுப்புரத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவும் இதுதான் காரணம். 53 பேர் விழுப்புரத்தில் நேற்று முதல் நாள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று விழுப்புரத்தில் 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

தொடர்ந்து கூடுகிறது

தொடர்ந்து கூடுகிறது

நேற்று சென்னையில் 203 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதற்கு அடுத்து விழுப்புரத்தில்தான் அதிகமாக 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 86 என்று உயர்ந்தது. நேற்று விழுப்புரத்தில் கொரோனா கேஸ் பாதிப்பு ஏற்பட்ட எல்லோரும் ஒரே சோர்ஸ் மூலம்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். எல்லோரும் கோயம்பேடு மார்க்கெட் உடன் தொடர்பு கொண்டவர்கள்.

பலர் லாரியில் வந்துள்ளனர்

பலர் லாரியில் வந்துள்ளனர்

சிலர் கோயம்பேடு மார்க்கெட் சென்று லாரியில் வந்துள்ளனர். சிலர் அவர்களை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். இப்படி கோயம்பேடு மார்க்கெட் மூலம் மட்டுமே நேற்று 33 பேர் அங்கு பாதிக்கப்பட்டனர். ஆனால் மூச்சு விட கூட அவகாசம் விடாமல் 13 மணி நேரத்தில் மீண்டும் அங்கு புதிய கொரோனா கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

மிக மிக மோசம்

மிக மிக மோசம்

இதுவரை 86 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 39 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 125 பேருக்கு தற்போது மொத்தமாக விழுப்புரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே இரவில் நடந்த சோதனையில் இத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், இவர்கள் எல்லோரும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள்.

சத்தமின்றி விழுப்புரத்தில் மீண்டும் கேஸ்கள்

சத்தமின்றி விழுப்புரத்தில் மீண்டும் கேஸ்கள்

இதனால் சத்தமின்றி விழுப்புரத்தில் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலர் இன்னும் விழுப்புரத்தில் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்ட பலர் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. முழுதாக சோதனை முடியும் போது இன்னும் பலருக்கு கொரோனா ஏற்படலாம் என்கிறார்கள்.

English summary
Coronavirus: Villupuram sees a surge of cases in 24 hours continuously due to Koyembedu Market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X