விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்.. அது நம்ம முருகானந்தம் வாத்தியார் வீட்டு நாய்க்கு!

நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய தம்பதி

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் நாய்க்கு நடத்தப்பட்ட மஞ்சள் நீராட்டு விழா- வீடியோ

    உளுந்தூர்பேட்டை: பந்தல், சீரியல்செட், வாழைமரம்... என மஞ்சள் நீராட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் ஒரு குறையும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது அந்த வீட்டில்!! ஆனால் விழா இளம் பெண்ணுக்கு இல்லை.. பெண் நாய்க்கு!!

    உளுந்தூர்பேட்டை உ. கீரனூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மீனாட்சி. முருகானந்தம் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். இவர்களுக்கு 15 வயதில் ஒரே ஒரு மகன். பெண் குழந்தை இல்லை என்று இவர்களுக்கு ரொம்ப ஏக்கமாம்.

    அதனால், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டுள்ளார்கள் இந்த தம்பதி. அதன்படியே தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ஒரு பெண் நாயை. அந்த நாய்க்குட்டியை 4,500 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினது முதல் தங்களது சொந்த மகளாகவே நினைத்து வளர்த்தனர்.

    முறைப்படி பத்திரிகை

    முறைப்படி பத்திரிகை

    இந்நிலையில், அந்த பெண் நாய்க்கு நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். அதற்காக ஒரு பத்திரிகை அடித்தார். பிறகு சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என எல்லாரையும் முறைப்படி விழாவுக்கு அழைத்தார்.

     ஃபுல்-மேக்அப்

    ஃபுல்-மேக்அப்

    வீட்டு முன்பு பந்தல் போட்டு சீரியல்செட், வாழைமரங்களை கட்டினார். அந்த தெருவில் முருகானந்தம் வீடே களை கட்டியது. வீடே இப்படி என்றால், பெண் எப்படி இருக்கும்? ஃபுல் மேக்அப்-தான்!

    அலங்காரம்

    அலங்காரம்

    தலையில், கழுத்தில் பூ தொங்கி கொண்டிருந்தது. புது டிரஸ் மாட்டி விட்டார்கள். அலங்காரம் செய்த பின்னர் அழைத்து வந்து அங்கே போடப்பட்டிருந்த சேரில் உட்கார வைத்தார்கள். முருகானந்தம் அழைத்திருந்த எல்லாருமே விழாவுக்கு வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 500 பேர் வந்துவிட்டார்கள்.

    நாய்க்கு ஆரத்தி

    நாய்க்கு ஆரத்தி

    எல்லோரும் சும்மா ஒன்றும் வரவில்லை.. வரும்போதே பலவகை தட்டுகளில் சீர்வரிசைகளை எடுத்து வந்திருந்தார்கள். சேரில் உட்கார வைத்த நாய்க்கு, பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்துவிட்டனர். சீர்வரிசை, தட்டு வைத்து விழாவை கவுரவித்த சொந்தக்காரர்கள் முதல் வந்திருந்த அனைவருக்கும் முருகானந்தம்-மீனாட்சி தம்பதிகள் சீர்வரிசை தட்டு கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    English summary
    Couple Celebrates Puberty Ceremony pet Dog in Ulundhurpet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X