விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் சிந்தனை உதயநிதியை முதல்வராக்குவது.. திமுக-காங் கூட்டணி என்பது குடும்ப ஆட்சி..அமித்ஷா தாக்கு

Google Oneindia Tamil News

விழுப்புரம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள் துறை அமைச்சர் அமித் ஷா, திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

ஆளும் அதிமுக பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தங்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். அதிமுக - பாஜ கூட்டணிக்கு ஆதரவாக பல்வேறு பாஜக தலைவர்களும் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்மூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்

தமிழில் பேச முடியாதது வருத்தம்

தமிழில் பேச முடியாதது வருத்தம்

இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உள் துறை அமித் ஷா, "நாட்டின் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தும் அளிக்கிறது. இதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து அமித் ஷா திமுக-காங்கிரஸ் கூட்டணியையும் விமர்சித்துப் பேசினார்.

குடும்ப ஆட்சி

குடும்ப ஆட்சி

அப்போது அமித் ஷா பேசுகையில், "அதிமுக - பாஜக கூட்டணி என்பது மக்களுக்கான கூட்டணி. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த கூட்டணி உழைக்கும். மறுபுறம், உள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது குறித்து சோனியா காந்தியும், உதயநிதியை முதல்வராக்குவது குறித்து ஸ்டாலினும் சிந்தித்து வருகின்றனர்.

Array

Array

காங்கிரஸ் கட்சி ரூ .12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டது, அப்போது திமுகவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. இன்று தமிழகத்தில் 2ஜி, 3ஜி & 4ஜி ஆகிய மூன்றும் உள்ளன. 2ஜி என்றால் மரான் குடும்பத்தின் 2 தலைமுறைகள், 3ஜி என்றால் கருணாநிதியின் குடும்பத்தின் 3 தலைமுறைகள். 4 ஜி என்றால் காந்தி குடும்பத்தின் 4 தலைமுறைகள்" என்றும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

வளர்ச்சி பணிகள்

வளர்ச்சி பணிகள்

2022ஆம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத இந்தியாவைப் படைக்க வேண்டும் என தெரிவித்த அவர், கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடு இல்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு அதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஒரு குடும்பத்துக்கு மருத்துவ வசதிக்காக ரூ5 லட்சம் செலவிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

English summary
Home minister Amit Shah slams DMK-Congress alliance in Villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X