விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இத்தாலி பெண்ணின் அடிமை நாராயணசாமி.. எச்.ராஜா ஆவேசம்!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: தமிழக அரசை மோடி அரசின் அடிமை அரசு என விமர்சனம் செய்த முதலமைச்சர் நாராயணசாமியை, இத்தாலி பெண்ணின் அடிமை நாராயணசாமி தமிழக அரசைப்பற்றி பேச தகுதியில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நீட் தேர்வை எதிர்த்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நீட் எதிர்ப்பு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம் புதுச்சேரி வந்தடைந்தது.

H.Raja press conference Regarding Chief Narayanasamy statement

அப்போது புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு ஏன் வாபஸ் பெறப்பட்டது தெரியுமா.. சீமான் கொடுத்த கலக்கல் விளக்கம் ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு ஏன் வாபஸ் பெறப்பட்டது தெரியுமா.. சீமான் கொடுத்த கலக்கல் விளக்கம்

இந்த பொதுகூட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரி மாநில அரசு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. ஆனால் அண்டை மாநிலமான தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மோடி அரசுக்கு அடிமை அரசாக இருந்துகொண்டு, முதுகெலும்பற்ற ஆட்சி நடத்துவதாக சாடினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். அதேபோன்று, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை எதிர்த்து மதசார்பற்ற அணிகள் இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகிவிட்டோம் என பேசினார்.

H.Raja press conference Regarding Chief Narayanasamy statement

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம், முதலமைச்சர் நாராயணசாமி தமிழக அரசை மோடி அரசின் அடிமை அரசு என விமர்சனம் செய்துள்ளது குறித்து கருத்து கேட்டதற்கு, நாராயணசாமி இத்தாலி பெண்மணியின் அடிமை, இத்தாலி சோனியாவின் அடிமை இதைப்பற்றியெல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் அந்நியர்களின் கைக்கூலியாக இருக்க மாட்டோம், அந்நியப் பெண்மணியின் அடிமையாக இருக்க மாட்டோம் என்று முதலில் முடிவு செய்யட்டும்.

அதன் பிறகு இதைப்பற்றி அவர் பேசட்டும். மரியாதை இல்லாத அரசியல் நடத்துவது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதலில் இத்தாலிக்காரியின் அடிமை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என கடுமையாக சாடினார்.

English summary
H.Raja press conference Regarding Chief Narayanasamy statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X