விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க அடிமை கட்சி.. நீங்க குடும்ப கட்சி.. ஸ்டாலின் - முதல்வர் இடையே வார்த்தை போர்.. தேர்தல் பரபர!

தமிழகத்தில் நடக்க உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இடையே கடுமையான வாக்குவாதம் இதனால் நடந்து வருகிறது.

வேலூர் லோக்சபா தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் சார்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்புதமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் திமுக மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர், திமுக ஒரு குடும்பம் மட்டும் நடத்தும் கட்சி. அங்கு தொண்டர்களுக்கு மரியாதை இல்லை.

திமுக எப்படி

திமுக எப்படி

திமுகவில் அப்பா, மகன், பேரன் என்று வரிசையாக பதவி வழங்கி அழகு பார்க்கிக்கிறார்கள். வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு, திமுக அரசு தான். ஊழலை பற்றி கனிமொழி பேசியுள்ளார். யார் யார் பேசவேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

முதல்வர் கனவு

முதல்வர் கனவு

முதல்வர் ஆகும் கனவு நினைவாக, என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அவரை மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக ஓர் கார்ப்பரேட் கம்பெனியை போல் செயல்பட்டு வருகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வீட்டை பற்றி சிந்திக்க மட்டுமே நேரம் உள்ளது, என்று குறிப்பிட்டார்.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். முதல்வரின் குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளித்தார். அதில், அதிமுக அடிமைகளின் கட்சியாக மாறிவிட்டது. பாஜக சொல்வதை தமிழகத்தில் நிறைவேற்றும் கட்சிதான் அதிமுக.

ஸ்டாலின் பதில்

ஸ்டாலின் பதில்

அவர்கள் இப்போது பாஜகவின் பேச்சை கேட்கும் கிளிப்பிள்ளை. தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.மத்திய பாஜக அரசுக்கு அடிபணியும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி முழுக்க ஊழலில் திளைத்து வருகிறது. எல்லா அமைச்சர்களும் வரிசையாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலை நடக்க விடமால் தமிழக அரசு செயல்ப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் திமுகதான் தமிழகத்தில் வலிமையாக வெற்றிபெறும். தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்த பணத்தை பதுக்குவதற்காகவே வெளிநாடு சென்றார். மக்களின் நலனுக்காக அவர் வெளிநாடு செல்லவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Harsh War of Words between DMK chief M K Stalin and TN CM amidst by-election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X