விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    AIADMK won in vikravandi byelection | விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி..தொகுதியை இழந்தது திமுக

    விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பாமகவும் அதிமுகவும் இணைந்து சந்தித்த காரணத்தால் அதிமுக மிகப்பெரிய வெற்றியை அதாவது 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்படி சொல்வதற்கு காரணம் 2016 ம் ஆண்டு தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக மோதி பெற்ற வாக்குகள் காரணம் ஆகும்.

    விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் 2016ம் ஆண்டு திமுக சார்பில் ராதாமணியும் அதிமுக சார்பில் ஆர். வேலு, பாமக சார்பில் அன்புமணி(டாக்டர் அன்புமணி ராமதாஸ் அல்ல), கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமமூர்த்தி, பாஜக சார்பில் ஆதவன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இதில் திமுக வேட்பாளர் ராதாமணி 63 ஆயிரத்து 757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர். வேலு 56 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 41 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

    என்னதான் பாட்டு பாடினாலும்.. டான்ஸ் ஆடினாலும்.. டிக் டாக் சோனாலியை நிராகரித்த ஆதம்பூர்என்னதான் பாட்டு பாடினாலும்.. டான்ஸ் ஆடினாலும்.. டிக் டாக் சோனாலியை நிராகரித்த ஆதம்பூர்

    திமுக வெற்றி

    திமுக வெற்றி

    கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட ராமமூர்த்தி 9981 வாக்குகள் பெற்று 4வது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட ஆதவன் 121 வாக்குகளும் பெற்றனர். இதில் 6912 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் ராதாமணி வெற்றி பெற்றார்.

    அதிமுக கூட்டணி

    அதிமுக கூட்டணி

    இந்நிலையில் ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாமக, பாஜக. தேமுதிக ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக-திமுக இடையே நேரடியாக போட்டி ஏற்பட்டது. கடந்த 21ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இதில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

    முத்தமிழ்ச்செல்வன்

    முத்தமிழ்ச்செல்வன்

    இதில் முடிவுகளை பார்த்தோம் என்றால், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 646 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 2913 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இதில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட புகழேந்தியைவிட 44 ஆயிரத்து 782 வாக்குகள் அதிகம் பெற்று பெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றிக்கு காரணம்

    வெற்றிக்கு காரணம்

    இந்த தேர்தலில் அதிமுக இந்த அளவுக்கு வெற்றி பெற அதிமுக ஆற்றிய களப்பணி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்னொரு காரணம் பாமகவின் வாக்குகள் . இந்த தேர்தலை ஈகோ பிரச்சனையாக கருதி ராமதாஸ் தானே முன்னின்று களம் இறங்கியதாக சொல்கிறார்கள். ஸ்டாலின் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். இதனால் அதுவரை அமைதியாக இருந்த ராமதாஸ் திடீரென ஸ்டாலின் மீது பாய்ந்தார். கடைசியில் பஞ்சமி நிலம் வரை விஸ்வரூபம் எடுத்தது. இந்த காரணங்களும் திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சொல்கிறார்கள்.

    English summary
    how aiadmk win in vikravandi assmbly by election 2019, resion listout here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X