விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டிவனத்தில் சொத்துக்காக குடும்பத்தினரை.. கொலை செய்த தம்பதிக்கு தூக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

விழுப்புரம்: திண்டிவனத்தில் சொத்துக்காகத் தாய், தந்தை, தம்பி ஆகியோரை கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவிக்குத் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சொத்துக்காகத் தந்தை ராஜி, தாய் கலைச்செல்வி, தம்பி கவுதம் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விட்டு, ஏ.சி வெடித்து இறந்து விட்டதாக நாடகமாடிய வழக்கில் மகன் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

husband and wife have been sentenced to death for killing their family for property

இந்த வழக்கு பூந்தமல்லி உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இருவரும் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ள நிலையில் தண்டனை விவரம் மாலை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

பாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டு பாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டு

இந்தச் சூழலில் தண்டனை தொடர்பான விவரங்களை நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்கும் தலா 4 தூக்குத் தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. மேலும், குற்றவாளிகள் இருவருக்கும் தல ரூ.3 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார்.

English summary
Tindivanam latest crime news. Tindivanam husband and wife have been sentenced to death for muder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X