விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாநாயகர் நோட்டீஸ்.. சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அதிரடி

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து சசிகலாவிடம் கேட்டு முடிவெடுப்போம் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத பட்சத்தில் 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என தெரிகிறது.

முசாபர்பூர் காப்பகத்தில் மாயமான 11 பெண்கள் கதி என்ன? தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. சிபிஐ திடுக் முசாபர்பூர் காப்பகத்தில் மாயமான 11 பெண்கள் கதி என்ன? தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. சிபிஐ திடுக்

வழக்கு

வழக்கு

இதனிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. மேலும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும் சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்றம் செல்ல விருப்பம் இல்லை

நீதிமன்றம் செல்ல விருப்பம் இல்லை

இந்த நிலையில் இதுகுறித்து கள்ளக்குறிச்சி பிரபு, தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தடை கோரி நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு போடமாட்டேன்

வழக்கு போடமாட்டேன்

என்னுடைய செயல்பாடுகள் சரி என்பது எனது கருத்து. நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. நான் இருப்பது அதிமுகவில்தான். அதன் ஒரு அணியாக இருக்கும் அமமுகவுடன் தான் இருக்கிறேன் என்கிற போது வழக்கு போடும் அவசியம் எனக்கு கிடையாது.

 சசிகலாவிடம் ஆலோசனை

சசிகலாவிடம் ஆலோசனை

நான் விளக்கம் கொடுக்க தயாராக உள்ளேன். இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தவறு நடந்தால் சசிகலாவிடம் கேட்டு முடிவெடுக்கவும் தயாராக இருக்கிறேன் என பிரபு தெரிவித்தார்.

English summary
Kallakurichi MLA Prabhu says that he is ready to answer Speaker's notice. He will discuss with Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X