விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்

நாம் தமிழருக்காக விக்கிரவாண்டியில் ஐடி ஊழியர்கள் கூடி உள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    IT Employees campaign in vikkiravandi election For NMK

    விழுப்புரம்: ஐடி ஊழியர்கள்தான்.. ஆனால், விக்கிரவாண்டி தெருக்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டி வருகிறார்கள்!

    வேலூரை போலவே.. இடைத்தேர்தலிலும் அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி.

    விக்கிரவாண்டியில் கந்தசாமி என்பவர் போட்டியிடுகிறார். வயசு 36 ஆகிறது. விவசாய குடும்பம்தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம். ஆனால் சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை செலுத்துபவர். சமூகச் செயற்பாட்டாளர் கந்தசாமி என்றாலே அந்த சுற்றுவட்டாரத்தில் நன்கு தெரிகிறது.

    சூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்குசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு

    ஆர்ப்பாட்டங்கள்

    ஆர்ப்பாட்டங்கள்

    தனிப்பட்ட முறையில் இவர் சமூக செயற்பாட்டாளர் என்றாலும், கட்சி ரீதியாக இவரது பணி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தீவிரமான களப்பணி ஆற்றுபவர். எத்தனையோ போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை கட்சி சார்பாக முன்னெடுத்துள்ளார்.

    மக்கள் சேவை

    மக்கள் சேவை

    சிகரம் நற்பணி மன்றம் தொடங்கி கிராமப்புற ஏழை எளிய முதியோர்களுக்கு, ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே இவர்களின் நலனுக்காக செலவிடும் கந்தசாமியின் உயரிய குணங்கள் மக்களை ஏற்கனவே சுண்டி இழுத்த ஒன்றுதான். அதனால்தான் சீமான் இவரை வேட்பாளராக முன்னிறுத்தி உள்ளார்.

    கட்சிகள்

    கட்சிகள்

    சாதி மற்றும் பணத்தை மையமாக வைத்து இந்த தேர்தலை சந்திக்கும் பிரதான இரண்டு கட்சிகளை எதிர்த்து சாதிக்கு அப்பால் எந்தவித பொருளாதார பின்புலமுமற்ற.. படித்த பட்டதாரியான கந்தசாமிக்கு ஆதரவாக இவர்கள் வந்துள்ளனர். நடந்து முடிந்த எம்பி தேர்தல் முடிவின் தாக்கமோ அல்லது அரசியல் கட்சிகளில் 3-வது இடத்தை முன்னேற்றமோ தெரியவில்லை.. ஐடி ஊழியர்கள் எல்லாம் கிளம்பி விக்கிரவாண்டிக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்கள்.

    கந்தசாமி

    கந்தசாமி

    சென்னையில் உள்ள இன்பஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட தனியார் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள்தான் இவர்கள் எல்லோரும், இதேபோலதான் வேலூரிலும் இவர்கள் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். இப்போது கந்தசாமிக்காக ஓட்டு கேட்டு வருகின்றனர் இந்த இளைஞர்கள்.

    ஆட்டு மந்தைகள்

    ஆட்டு மந்தைகள்

    இப்படி ஐடி ஊழியர்கள் லீவு போட்டுவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளன. பிரச்சார கூட்டங்களுக்கு ஆட்டு மந்தைகள் போல வேனில் மக்களை அழைத்து செல்வதை பார்திருக்கிறோம்.. ஓட்டுக்கு 500, 1000 பணத்தை தருவதை பார்த்திருக்கிறோம்!

    விக்கிரவாண்டி தெருக்கள்

    விக்கிரவாண்டி தெருக்கள்

    ஆனால் ஐடி ஊழியர்கள் பந்தாவாக டிரஸ் போட்டுக் கொண்டு, கையில் கரும்பு விவசாயி சின்னத்தை கெத்தாக பிடித்து கொண்டு.. வீடு வீடாக நோட்டீஸ் வழங்கி.. விக்கிரவாண்டி தெருக்களில் ஓட்டுகேட்டு வருவதை பார்க்கவே புதுசாக இருக்கிறது.. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!

    English summary
    chennai it workers campaign in vikkiravandi election for naam tamilar party candidate kandasamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X