• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நடுராத்திரி.. பாட்டி மீது உட்கார்ந்து.. மண்ணாங்கட்டி மகன் செய்த செயல் இருக்கே.. அலறிய கள்ளக்குறிச்சி

|

கள்ளக்குறிச்சி: பாட்டி செத்து போயிட்டாங்க.. அந்த பாட்டியின் சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்து தியானம் செய்துள்ளார் ஒரு இளைஞன்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவத்தை கண்டு, கள்ளக்குறிச்சியே கதி கலங்கி போயுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி.. இவரது மகன் ஹரிஹரன்.. 21 வயதாகிறது.. ஒரு தனியார் காலேஜில் பிஎஸ்சி அக்ரி. 3-ம் வருடம் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லாக்டவுன் போட்டுவிடவும், ஹரிஹரனின் காலேஜும் மூடப்பட்டுவிட்டது.. அதனால், வீட்டில் இருந்தே ஆன்லைன் கிளாஸ்களில் பங்கேற்று வந்தார் ஹரிஹரன்.. மீதி நேரத்தில் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.

"பச்சை துரோகம்".. தலக்கு தில்.. காங். to தமாகா to அதிமுக to அமமுக to திமுக.. இப்ப இப்டி ஒரு முடிவு

 ப்ரீ ஃபயர்

ப்ரீ ஃபயர்

இதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்றால் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.. இதனால் எப்ப பார்த்தாலும் கையில் போனுடனேயே இருந்திருக்கிறார்.. சரியாக சாப்பிடுவதும் இல்லையாம்.. தூங்குறதும் இல்லையாம்.. இரவு - பகல் எல்லாமே ஹரிஹரனுக்கு ஒன்றுதான். வீட்டில் எவ்வளவோ கண்டித்தும், இந்த விளையாட்டை அவர் நிறுத்தவே இல்லை.

சிகிச்சை

சிகிச்சை

ஆனால் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக, ஹரிஹரன் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.. திடீரென தானாகவே பேசுவாராம்.. திடீரென கோபப்படுவாராம்.. அதனால் பயந்து போன பெற்றோர், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. டாக்டர்கள் செக் செய்து பார்த்துவிட்டு கேம் விளையாடியே இப்படி மனநிலைமை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.. இதனால் அதிர்ந்து போன பெற்றோர், கடந்த 6 மாதமாக, தொடர்ந்து சிகிச்சை தந்து கொண்டிருந்தனர்.

பாட்டி

பாட்டி

எனினும், பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு, உளுந்தூர்பேட்டை கிராமத்தில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டார் ஹரிஹரன். இதனால், பாட்டி வீட்டிலும் இவரை கட்டுப்படுத்த முடியவில்லை.. டாக்டர் தந்த மாத்திரைகளையும் சரியாக எடுத்து கொள்ளமல் இருந்திருக்கிறார்.. இதனால் நிலைமை இன்னும் மோசமானது.. நாளுக்கு நாள், நான்தான் கடவுள் என்று எல்லாரிடமும் சொல்லி கொண்டு திரிந்துள்ளார்..

 கொலை

கொலை

சம்பவத்தன்று இரவு, பாட்டியின் உடல் மீது உட்கார்ந்து தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.. அதற்காக பாட்டி தலையிலும், நெஞ்சிலும் பெரிய பெரிய கல்லை தூக்கி தாக்கி உள்ளார்.. பாட்டி வலி தாங்க முடியாமல் அலறினார்.. ரத்தம் கொட்டியது.. இறுதியில் பாட்டி இறந்துவிட்டார்.. உடனே அந்த சடலத்தை தரதரவென வீட்டில் இருந்து ரோட்டிற்கு இழுத்து கொண்டு வந்து போட்டு மறுபடியும் கல்லால் தாக்கி மந்திரங்கள் ஓதியபடி கத்தி உள்ளார்...

கைது

கைது

இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அலறினர்.. உடனடியாக எலவனாசூர்கோட்டை ஸ்டேஷனுக்கு புகார் தந்தனர்.. போலீசாரும் விரைந்துவந்து பாட்டியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... இறுதியில் ஹரிஹரனையும் கைது செய்தனர்.

மனநிலை

மனநிலை

முன்பெல்லாம் சில பிள்ளைகள் ஆன்லைன் விளையாட்டுக்களில் நேரத்தை மட்டுமே தொலைத்து கொண்டிருந்தனர்.. இப்போது தங்களையே தொலைத்துவிடும் அபாயத்தை எட்டி வருவது பெரும் வேமதனைக்குரியதாக மாறி வருகிறது.. மனநிலையின் சமநிலையை இழக்க செய்யும் அளவுக்கு இந்த செல்போன் கேம்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.. எப்படி டிக்டாக்கை தடை செய்தார்களே, அதுமாதிரி இந்த செல்போன் கேம் ஆப்களையும் தடை செய்தால் புண்ணியமா போகும்..!

English summary
Kallakkurichi Murder and College Student becomes psycho after playing Cellphone Game
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X