விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்!

காதல் ஜோடி ஒன்று விழுப்புரம் போலீசாரிடம் தஞ்சமடைந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசிடம் பெற்றோர் புகார்... கதறி அழுத காதல் ஜோடி

    விழுப்புரம்: "எங்களை விட்டுடுங்க.. ப்ளீஸ்.." என்று கிருத்திகா கதறவும்.. சுற்றியிருந்த போலீசார்களே மனம் கலங்கி கண்ணீர் விட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் காலனியை சேர்ந்தவர் விமல். புதுவை கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். அப்போது கூட வேலைபார்த்த கிருத்திகாவை காதலித்தார்.. கிருத்திகா சேலத்தை சேர்ந்தவர்.

    2 வருட காதல் இது.. இருவரும் வேறு வேறு சாதி.. வீட்டில் விஷயம் தெரிந்தது.. பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.. அதனால், கிருத்திகாவை விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் விமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு, தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    வி.அகரம்

    வி.அகரம்

    இதனால், கிருத்திகாவின் பெற்றோர், மகளை விமல் கடத்தி விட்டதாக சேலம் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் தந்தனர். இந்த சமயத்தில் வி.அகரம் கிராமத்தில் கிருத்திகா இருப்பதாக தகவலறிந்து ஆட்டையம்பட்டி போலீஸார் இருவருடன் அங்கு சென்றனர். வளவனூர் போலீசார் 2 பேர், விமலையும், கிருத்திகாவையும் ஜீப்பில் விசாரணைக்கு ஏற்றினர். காரில் காதல் ஜோடியும், வளவனூர் போலீசார் பேர், ஆட்டையம்பட்டி போலீசார் 2 பேர் என 4 போலீசார் ஜீப்பில் உட்கார்ந்தனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனிடையே விமலின் நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து ஜீப்பை செல்ல விடாமல் தடுத்தனர். ஆனாலும் விரட்டிக் கொண்டு வந்து அவர்கள் போலீஸ் ஜீப்பை தாக்கியதால், என்ன செய்வதென்றே தெரியாமல், விழுப்புரம் எஸ்பி ஆபீசுக்குள் ஜீப்பை கொண்டு போய் நிறுத்திவிட்டனர். அங்கு வாக்குவாதமும் ஆரம்பமானது.

    இறுக்கமான சூழல்

    இறுக்கமான சூழல்

    "எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்" என்று கிருத்திகா கதறியதை கண்டு 4 போலீசாருமே மனம் கலங்கி விட்டனர். காதல் ஜோடி கைகளை கொஞ்ச நேரம்கூட விடவில்லை.. கைகளை கோர்த்துக் கொண்டு அழுதுகொண்டே இருந்தனர். இதனால் அந்த இடத்தில் ஒரு இறுக்கமான சூழல் ஏற்பட்டது.

    திருமணம்

    திருமணம்

    பின்னர், உதவி எஸ்பி சரவணக்குமாரிடம் காதல் ஜோடியை போலீசார் ஒப்படைத்தனர். அப்போது கடத்தல் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், பெண்ணை அழைத்து செல்ல வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "நாங்கள் மேஜர், என் விருப்பப்படிதான் இந்த கல்யாணம் நடந்தது" என்று கிருத்திகா எழுதி தரவும், இந்த பிரச்சைனை முடிவுக்கு வந்தது. இறுதியில் ஜோடி விமலின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    English summary
    lovers kidnapped in tamil film style and couple asylum to vizhupuram police station
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X