• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தானேனே தானேனன்னே.. என்னா ஒரு டான்ஸ்.. வேலுமணிக்கு ஒயிலாட்டமும் தெரிஞ்சுருக்கு.. சூப்பரப்பு!

|
    Minister velumani Campaign with Oyilattam dance

    விக்கிரவாண்டி: வேலுமணிக்கு ஒயிலாட்டம் ஆட தெரியும் என்கிற சமாச்சாரமே நமக்கு இப்போதுதான் தெரிகிறது.. ஒயிலாட்டக் கலைஞர்களுடன் தாளம் சிறிதும் பிசறாமல்... அவர்களுக்கு இணையாக டான்ஸ் ஆடி கலக்கி உள்ளார் மாண்புமிகு அமைச்சர் வேலுமணி

    தமிழக அமைச்சர்களில் மிக முக்கியமானவர் வேலுமணி.. முதல்கட்ட அமைச்சர்களின் வரிசையில் இவர்தான் முன்னிலை.. பார்க்க படு சீரியஸாக தெரிவார்.. ஆனால் அரசியலில் அத்தனையும் அத்துப்படி.. தமிழக பிரச்சனைகளை டெல்லி வரை கொண்டு சென்று விரிவாக பேசி.. தீர்வு காண்பார். இதெல்லாம்தான் நாம் இதுவரை பார்த்த அமைச்சர் வேலுமணி!

    minister sp velumani dance video

    ஆனால் விக்கிரவாண்டியில் வேலுமணி வேறுவிதமாக நமக்கு தென்பட்டார். இடைத்தேர்தல் வேகம் எடுத்து வருகிறது. திமுகவா, அதிமுகவா என்ற மோதல் பகிரங்கமாக வெடித்து கிளம்பி பிரச்சாரம் சூட்டில் பறக்கிறது. தமிழக அரசின் குறைகளை லிஸ்ட் போட்டு ஸ்டாலின் சொல்லி வாக்கு கேட்டு வரும் நிலையில், வேலுமணி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்துள்ளது வித்தியாசமாக இருக்கிறது.

    முதல்வருக்கு இந்த இரு தொகுதி தேர்தலின் வெற்றி பெரும் சவாலாக உள்ள நிலையில், அமைச்சர்கள் பலரும் இந்த பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். அதன்படி, அமைச்சர் எஸ்பி வேலுமணி விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டியை அடுத்த பனமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு ஒயிலாட்டக் கலைஞர்கள் நடனம் ஆடி கொண்டிருந்தனர். யாருமே எதிர்பார்க்காத வகையில், அமைச்சர் திடீரென அவர்களுடன் சேர்ந்த ஒயிலாட்டம் ஆட ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்து தொண்டர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அமைச்சர் இப்படி ஆடுவதை பார்த்தும், தங்களையும் மறந்து அவர்களும் சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டனர் அதிமுக நிர்வாகிகள்.. இவர்கள் எல்லாரும் ஆடுவதை பார்த்து தொண்டர்களும் இதில் சேர்ந்து கொண்டனர்.

    பம்பை இசைக்கு ஏற்ப நடனமாடினார் அமைச்சர். மற்றவர்கள் ஒயிலாட்ட டிரஸ்ஸில் தென்பட, அமைச்சர் மட்டும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் கலக்கலாகவும், தாளம் தப்பாமலும், ஆடி அசத்தினார். இந்த கலக்கல் வீடியோதான் வைரலாகி வருகிறது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    tn minister sp velumani dances oyilattam in vikkiravadi byelection campaign and this dancing video goes viral on socials now
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more