விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ. மரணத்துக்கு நானா காரணம்.. அப்படி சொன்னது நானா.. அவரை ஏன் கேட்கலை.. மு.க.ஸ்டாலின் கேள்வி

எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஜெ. மரணம் பத்தி பேசினாலே இவருக்கு ஆத்திரம் வந்துவிடுகிறதே.. அவர் மரணத்துக்கு நானா காரணம்? அப்படி சொன்னது நானா? தைரியம் இருந்தா என் மேல கேஸ் போடுங்க பார்க்கலாம்' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியில் முக ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் அதிமுக அரசை கடுமையாக சாடி பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

ஆனால் 2015-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மிகப்பெரிய ஊழல் பட்டியலை தயார் செய்து அப்போது கவர்னராக இருந்த ரோசய்யாவிடம் கொடுத்தனர். அதில் 18 ஊழல்களை வரிசைப்படுத்தி சொல்லியிருந்தனர். கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுத்த பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்?

நீயா நானா.. ஒத்தைக்கு ஒத்தை.. விறுவிறுப்பான விக்கிரவாண்டி, நாங்குநேரி.. இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறதுநீயா நானா.. ஒத்தைக்கு ஒத்தை.. விறுவிறுப்பான விக்கிரவாண்டி, நாங்குநேரி.. இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

கருணாநிதி

கருணாநிதி

ஜெயலலிதா மரணம் குறித்து நான் பேசியதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. அதனால்தான் இப்போ அவர் திடீரென, ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், நானும் தான் காரணம் என்கிறார். நான் தான் காரணமா?, அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறதுன்னு சொன்னது நாங்கதானா? உங்களோடு இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் மரணத்தில் மர்மம் இருக்குன்னு சொன்னார்.

ஏன் கேக்கல?

ஏன் கேக்கல?

அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைச்சீங்க.. விசாரணையும் நடந்து வருகிறது. இதில் ஓபிஎஸ்-க்கு 5 முறை சம்மன் அனுப்பினாங்களே.. அவர் ஏன் போகலை.. இதை பத்தி ஏன் நீங்க கேக்கல? இதுல மரணத்துக்கு காரணம் நாங்கதான்னு எங்க மேல பழியை போடறீங்க...

மர்மம்

மர்மம்

என் மேல கேஸ் போட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்துங்களேன்.. யார் குற்றவாளி கூண்டில் நிற்கப்போகிறார்கள் என பார்க்கதானே போறோம்.. ஆனால் ஒன்று.. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை நான் ஒத்துக்கறேன்... ஆனால், அதுக்கு காரணமானவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்டு பிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவோம்.

பொய்.. அபாண்டம்

பொய்.. அபாண்டம்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் போனதற்கும் நாங்கதான் கரணமா? அவங்கதான் கேஸ் போட்டாங்கன்னு அபாண்டமா பொய் பேசறார். நாங்கதானே தேர்தலை நடத்தணும்னு கோர்ட்டுக்கே போனோம்.

பாமக

பாமக

உங்க கூட்டணியில் இருக்கிறவங்க எல்லாம் யார் தெரியுமா? ஒருத்தரையொருத்தர் காட்டி தந்தவர்கள்.. பழிவாங்கி கொண்டிருப்பவர்கள்.. அவர்களுடன் பாமக எப்படி ஒட்டிஉறவாடிட்டு இருக்குன்றது எங்களுக்கு தெரியும்.. அவங்க கூட ஏன் கூட்டணி வெச்சீங்க.. அவங்ககூட கூட்டணி சேர்ந்ததால்தான் எம்பி தேர்தலில் பாமக ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை.

கவர்னர்

கவர்னர்

2015-ல், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ரெண்டு பேரும் மிகப்பெரிய ஊழல் பட்டியலை ஒன்றை தயார் செய்து அப்போது கவர்னராக இருந்த ரோசய்யாவிடம் கொடுத்தார்களே.. அதில் 18 ஊழல்களை வரிசைப்படுத்தி சொல்லியிருந்தார்களே.... அப்படி இருக்கும்போது, கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுத்த பாமகவுடன் அதிமுக கூட்டணி ஏன் வைக்கணும்?" என்று கேள்வி எழுப்பினார்.

English summary
dmk leader mk stalin attacked aiadmk and slams edapadi palanisamy and his alliance parties in vikkirvandi election meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X