• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சில தவறான வியூகங்கள்... விழுப்புரம் அதிமுக கூட்டத்தில்.. வெடித்த ஓபிஎஸ்.. பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

விழுப்புரம் : சில தவறான வியூகங்களால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வியை தழுவியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது இதனை தெரிவித்தார்.

கருணாநிதி முதல் முக ஸ்டாலின் வரை தேர்தல் நேரத்தில் அண்டப்புழுகு ,ஆகாய புழுகு சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஆளும் தி மு க அதிகாரத்தை வைத்தும் பணத்தை வைத்தும், திருமங்கலம் பார்முலா மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

 மே வங்கத்தில் 3 தொகுதிகளை.. அப்படியே தட்டி தூக்கிய திரிணாமுல்.. மிக பெரிய தோல்வியை எதிர்நோக்கி பாஜக மே வங்கத்தில் 3 தொகுதிகளை.. அப்படியே தட்டி தூக்கிய திரிணாமுல்.. மிக பெரிய தோல்வியை எதிர்நோக்கி பாஜக

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

விழுப்புரம் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில், முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், தேர்தல் பணி குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக மீது பொய் புகார்

திமுக மீது பொய் புகார்

பின்னர் கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம், திமுக கட்சி பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அண்ட புழுகு, ஆகாய புழுகு, சொல்லிவிட்டுச் செல்வார்கள். இப்போது மட்டும் அல்ல திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோதே இப்படிதான் பொய் மூட்டைகளை சொல்லிவிடுவார்கள். அதைத்தான் தற்போது மு க ஸ்டாலின் 502 திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு தற்போதுவரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றார்.

மாணவர்களுக்கு மடிக்கணிணி

மாணவர்களுக்கு மடிக்கணிணி

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திக்காமல் அவரது குடும்பத்தாரை பற்றி மட்டுமே சிந்திப்பார் என விமர்சனம் செய்தார் ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்களைப் பற்றியும் சிந்தனை கொண்டவர் அவர் கொண்டுவந்த பல நல்ல திட்டங்களான இலவச அரிசி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், மடிக்கணினிகள் என பல நல்ல திட்டங்களை அவர் செய்துள்ளார்.

திமுக கட்டப்பஞ்சாயத்து

திமுக கட்டப்பஞ்சாயத்து

தற்பொழுது நமக்கான ஆட்சி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் காத்திருக்கிறது. எப்படி என்றால் அதிமுக பல நல்ல திட்டங்களை செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்றிருக்கின்றனர். ஆனால் தற்பொழுது திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து பிறர் சொத்தை அபகரிப்பது போன்ற அவப்பெயர்களை பெற்றிருக்கின்றனர்.

அதிமுக தோல்வி

அதிமுக தோல்வி


மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஆளுகின்ற அரசுக்கு துணையாக கடலூர் மாவட்டத்தில் ஒரு எம்பியின் தொழிற்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் இதுவரை எந்த வழக்கும் பதிவு போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கி 30 ஆண்டு நிறைவு பெறும் இந்த வேளையில் அனைவரும் வெற்றிக்கனியை பெற்று இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை பலத்தை காண்பிக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத் தந்த ஒரே கட்சி அஇஅதிமுகதான்.காவிரிக்காக திமுக செய்தது என்ன? கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், சில தவறான வியூகங்களால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வியை தழுவியது என்று தெரிவித்தார்.

பெரிய வித்தியாசம் இல்லை

பெரிய வித்தியாசம் இல்லை


இதைத் தொடர்ந்து பேசிய முன்னால் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கட்சி ஆட்சிப் பொறுப்பை எழுந்தாலும் இந்த ஆட்சி செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆளும் திமுக கட்சி தற்பொழுது திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி மக்களிடையே பணத்தை கொடுத்து அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கின்றார்கள். ஆனால் அதிமுக மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்கிறது. இதில் நாம் வெற்றி பெறுவோம் நம்புகிறேன். திமுக வெற்றி பெற்றது பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. கடந்த தேர்தலில் ஒரு சதவீத மட்டுமே நாம் இழந்துவிட்டோம் அதனால் தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்" இவ்வாறு பேசினார்.

English summary
aiadmk co ordinator O Panneerselvam said on villupuram on sunday, AIADMK lost the last assembly election due to some wrong strategies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X