விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாரு நிஜமா டீ குடிக்கிறது.. யாரு நடிக்கிறது.. எல்லாம் எமக்கு தெரியும்.. ஓபிஎஸ் டரியல் பேச்சு!

முக ஸ்டாலினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: "திமுக தலைவர் ஸ்டாலினை போல சைக்கிள் ஓட்டுறது, டீ கடையில் டீ குடிக்கிறது.. இப்படிஒரு மாய தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன். ஏன்னா நானே டீ கடை நடத்தியவன்... டீ கடையில் நிஜமாவே டீ குடிக்கிறது யார்? டீ குடிக்கிறது போல நடிக்கிறது யார்?ன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக உறுப்பினர் சுதீஷை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் செய்தார். சங்கராபுரம் பஸ் ஸ்டாண்டில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் பேசியதாவது:

சட்டரீதியாக போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தமிழகத்துக்காக வாங்கி தந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். அதேபோல, காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தில் எந்த முதல்வரும் சாதிக்காததை சாதித்து காட்டியவரும் அம்மாதான்! அதனால்தான் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த நாள் தான் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று அவர் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்?.. பல கோடி மோசடி.. வழக்கு!நிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்?.. பல கோடி மோசடி.. வழக்கு!

டீ கடை நடத்தியவன்

டீ கடை நடத்தியவன்

திமுக தலைவர் ஸ்டாலினை போல நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது, டீ கடையில் டீ குடிப்பது, இதுபோன்ற மாய தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன். ஏன்னா.. நானே டீ கடை நடத்தியவன்தான். டீ கடையில் டீ குடிப்பர் யார்? டீ குடிப்பதுபோல நடிக்கிறது யார்? என்று எனக்கு தெரியும்.

யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

பேண்ட், சட்டை

பேண்ட், சட்டை

தன்னை ஒரு விவசாயி என்று சொல்லி கொள்கிறார். தமிழ்நாட்டுல எந்த விவசாயியும் பேண்ட் போட்டுக்கொண்டு ஏர் உழுவது கிடையாது. ஆனால் ஸ்டாலின் கலர் கலராக பேண்ட், சட்டைகளை போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

செரிக்குமா?

செரிக்குமா?

திமுகவினர் அப்படியேதான் இருக்கிறார்கள். பிரியாணி கடை, பரோட்டா கடைகளுக்கு போய் சாப்பிடுகிறார்கள். ஆனால் சாப்பிட்டதுக்கு கடைக்காரங்க காசு கேட்டால், தராமல் கடைக்காரர்களையே போட்டு தாக்குகிறார்கள். காலையில இருந்து அடுப்படியில் நின்று கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவங்க வயித்தில் திமுக அடிக்கிறாங்களே... இப்படி ஓசியில் சாப்பிட்டால் செரிக்குமா.. செரிக்காது.

பழைய சோறு

பழைய சோறு

ஏற்கனவே அவங்க கூடவே இருந்தவங்களோடதான் இப்போது திரும்பவும் திமுக கூட்டணி அமைத்து இருக்கிறது. அதனால திமுக கூட்டணி ஒரு பழைய சோறு கூட்டணி ஆகும்" என்றார்.

English summary
Dy CM O Panneerselvam campaigned for DMDK Sudheesh in Kallakurichi Constitution and criticized DMK Leader MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X