விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செஞ்சி கோட்டை சுவரை இடித்து விட்டு செல்வாரா பெருமாள்.. பெரும் பரபரப்பு

செஞ்சி நகரில் பிரமாண்ட பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வழியெல்லாம் வீடு, கடைகளை இடித்து கொண்டு செல்லும் கோதண்டராமர்-வீடியோ

    செஞ்சி: பிரமாண்ட பெருமாள் சிலை இன்னும் செஞ்சியையே தாண்டவில்லை!!

    வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.

    அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் டயர் மண் சாலையில் சிக்கி கொண்டது. அதோடு 6 டயர்களும் டமார் டமார் என வெடித்தன.

    மக்கள் போராட்டம்

    மக்கள் போராட்டம்

    பின்னர் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்து சென்றதால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்திலேயே குதித்து விட்டனர்.

    குறுகிய சாலை

    குறுகிய சாலை

    பிறகு நேற்று முன்தினம், விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் இருந்து பெருமாள் சிலை புறப்பட்டது. செஞ்சி நகருக்குள் நுழைந்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. ஆனால் செஞ்சி கோட்டை சுற்று சுவருக்கு இடையே செல்லும் மிகவும் சாலை குறுகியதாக இருக்கிறது.

    தொல்லியல் துறை

    தொல்லியல் துறை

    அவ்வழியே எடுத்து சென்றால் செஞ்சிக்கோட்டை சுற்றுச்சுவரை இடித்த பின்னர் தான் எடுத்து செல்ல முடியுமாம். அதனால் இந்த வழியாக அனுமதிக்க முடியாது என்று தொல்லியல் துறையினர் சொல்லி விட்டார்கள். அதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெற விரைந்துள்ளனர்.

    தாண்டவில்லை

    தாண்டவில்லை

    எனவே சிலையை எடுத்து செல்வதில் திரும்பவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு செஞ்சியை இன்னும் விஸ்வரூப கோதண்டராம சிலை தாண்டவில்லை. எனினும் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பிரமாண்ட சிலையை வந்து வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.

    English summary
    Perumal Wishwaroopam Statue and its Obstacls. Statue is stopped in Senchi because of no way to go.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X