விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக-வீடியோ

    விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வெல்ல முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையூட்டினார்.

    அண்மையில் வடமாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக பெரும் சரிவை சந்தித்தது. இதையடுத்து இது நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடராமல் இருக்க பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளது.

    அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கூட்டி பாஜக தலைமை எடுத்த வியூகத்தை அவர்களுக்கு விளக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸிங்கில் தோன்றி பேசி வருகிறார்.

    கேள்விக்கு பதில்

    கேள்விக்கு பதில்

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பிஜேபி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடினார். அப்போது உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

    ஜனநாயக அமைப்பு

    ஜனநாயக அமைப்பு

    அப்போது அவர் பேசுகையில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைத்த பயன்களை மக்களிடம் எடுத்துக்கூற வலியுறுத்திய அவர், ராணுவம், தலைமை கணக்காயர், உச்சநீதிமன்றம் என அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதிக்கிறது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    தேர்தலில் தோற்றால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு என அழும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டும் அதை ஏற்றுக் கொள்கின்றன. நாடாளுமன்றத்தில் பாஜக வென்றே தீரும் என நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    கான்பிரன்சிங்

    கான்பிரன்சிங்

    இதேபோன்று இன்று சென்னை வேலூர் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நரேந்திர மோடி உரையாடினார். தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலைந்துரையாடியதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் பணி தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    English summary
    PM Narendra Modi says that BJP will win in Tamilnadu Loksabha elections. He talked this in Video conferencing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X