விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் என்.ஆர்.சியை செயல்படுத்தக் கூடாது: பா.ம.க. பொதுக்குழு அதிரடி தீர்மானம்

Google Oneindia Tamil News

திண்டிவனம்: தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை (என்.ஆர்.சி) செயல்படுத்தக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ள பிரவாஸ் பேலஸில் இன்று நடைபெற்றது. இதில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

PMK also opposes NRC in Tamilnadu

அத்தீர்மானத்தில், தமிழகத்தில் என்.ஆர்.சி.க்கான தேவை எதுவும் இல்லை. என். ஆர்.சி. தயாரிப்பதால் தமிழக மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும்.

ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார்- சென்னை பல்கலை.யில் படித்தவர்!ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார்- சென்னை பல்கலை.யில் படித்தவர்!

ஆகையால் தமிழகத்தில் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்; ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

ராஜ்யசபாவில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பாமக வாக்களித்து கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் என்.ஆர்.சி.க்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

English summary
PMK General Council passed a resolution against NRC in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X