விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமக நிறுவனர் ராமதாஸின் உடன் பிறந்த தம்பி சீனிவாசன் காலமானார்..!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் உடன் பிறந்த தம்பி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.

பாமக நிறுவனர் ராமதாஸின் உடன் பிறந்த தம்பியான சீனிவாசன், திண்டிவனத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அண்ணன் அரசியல் கட்சி நடத்தி வந்தாலும் கூட அதிலிருந்து ஒதுங்கியே இருந்து வந்தார் சீனிவாசன்.

PMK founder Ramadoss brother Srinivasan has passed away

சொந்தமாக கிரஷர் உள்ளிட்ட தொழில்களை கவனித்து வந்த சீனிவாசன் நேரடி அரசியலில் தலைக்காட்ட விருப்பம் காட்டாதவர். அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வருவதற்கு முன் தனது அண்ணன் ராமதாஸுக்கு அரசியல் ரீதியாக பக்கபலமாக நின்றவர் சீனிவாசன்.

இதனிடையே சீனிவாசன் மறைவு ராமதாஸ் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடிந்த கையோடு இப்படியோரு துக்க நிகழ்வு நிகழ்ந்திருப்பதால் ஒட்டுமொத்த தைலாபுரம் தோட்டத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்... எதிர்க்கட்சியாக கூட அதிமுக வரமுடியாது -மு.க.ஸ்டாலின் பேச்சுஎன்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்... எதிர்க்கட்சியாக கூட அதிமுக வரமுடியாது -மு.க.ஸ்டாலின் பேச்சு

சீனிவாசன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

''பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சகோதரர் திரு. சீனிவாசன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடன்பிறந்த சகோதரரை இழந்த சோகத்தில் இருக்கும் மருத்துவர் அய்யா அவர்களுக்கும், திரு. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''

English summary
PMK founder Ramadoss brother Srinivasan has passed away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X