விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக நிர்வாகி சுயேட்சையாக போட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் | Nanguneri By Election

    விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிடுவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமோகன் காலமானதால் அத்தொகுதிக்கு அக்டோபர் 21-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றனா.

    திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தியும் அதிமுக சார்பாக முத்தமிழ்ச்செல்வனும் களத்தில் உள்ளனர். இருகட்சிகளின் மூத்த தலைவர்கள் தலைமையில் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று திடீரென பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    PMK functionary files nomination as Independet candidate for Vikravandi by Election

    தமது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று ராஜா வேட்புமனுத் தாக்கல் செய்தார். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் ராதாகிருஷ்ணன் போட்டியிட விரும்பவில்லை என கூறிவிட்டார்.

    ராதாகிருஷ்ணன் போட்டியிட்டிருந்தால் திமுகவுக்கு போட்டி மிக கடுமையான இருந்திருக்கும். தற்போது அதிமுக வேட்பாளருக்கு எதிராக கூட்டணி கட்சியான பாமகவின் நிர்வாகயே சுயேட்சையாக போட்டியிடுவது களநிலவரம் திமுகவுக்கு சாதகமாக இருக்கக் கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது.

    English summary
    PMK functionary today filed nomination as Independet candidate for the Vikravandi by Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X