விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் மோசடி.. ஆசிரியை கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஸ்கூல் டீச்சர் பியூலா ஏலச்சீட்டு நடத்தி சுமார் 40 ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் பியூலா. இவரது கணவர் விமல்துரைநாதன். பியூலா அதே பகுதியில் உள்ள தனியார் ஸ்கூல் ஒன்றில் டீச்சராக பணியாற்றி வருகிறார்.

ஸ்கூல் நேரம் தவிர மற்ற நேரங்களில், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சீட்டு நடத்தினால் நல்லா சம்பாதிக்கலாம் என்று சொல்லி கொண்டே இருப்பாராம்.

 40 லட்சம் ரூபாய்

40 லட்சம் ரூபாய்

இப்படியே பேசி பேசி, 30க்கும் மேற்பட்ட ஆட்களை மாச சீட்டுக்கு சேர்த்துவிட்டார். கடைசியில் 40 லட்ச ரூபாயை மோசடியும் செய்துவிட்டார்.

 போலீசில் புகார்

போலீசில் புகார்

இந்த விஷயம் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தெரியவந்ததும் ஆத்திரமடைந்தார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் போன ஜூலை மாதம் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

 பியூலா கைது

பியூலா கைது

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பியூலாவை பிடித்து விசாரித்தனர். அப்போது, விமலநாதன், பியூலா இருவருமே ஏலச்சீட்டு நடத்தி 40 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பியூலாவை கைது செய்தனர்.

தலைமறைவு

தலைமறைவு

ஆனால் விமல் துரைநாதன் எஸ்கேப் ஆகிவிட்டார். தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி போலீசார் தேடி வருவதுடன், பியூலாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Rs. 40 lakh cheating case woman arrest near Marakkanam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X