விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு!

பாமக நிறுவனர் ராமதாஸ் அளிக்கும் விருந்திற்காக மிகப்பெரிய அளவில் சிறப்பு உணவுகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அளிக்கும் விருந்திற்காக மிகப்பெரிய அளவில் சிறப்பு உணவுகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கூட்டணி கட்சிகளுக்கு விருந்து அளிக்கிறார். அதிமுகவுடன் லோக்சபா தேர்தல் கூட்டணி இறுதியானதால் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

விழுப்புரம் தைலாபுரத்தில் ராமதாசுக்கு இருக்கும் வீட்டில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

யார் யார்

யார் யார்

விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் பலர் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் விழா நடக்கும் இடத்திற்கு வரும் போது பாமகவினர் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

சாப்பாடு

சாப்பாடு

இதற்காக சிறப்பு உணவுகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க அசைவம் தயார் செய்யப்பட்டு உள்ளது. மீன், நண்டு, ஆட்டுக்கறி, கோழிக்கறி உள்ளிட்ட உணவுகள் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. சில எம்எல்ஏக்களுக்காக மட்டும் சைவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கவனமாக செய்தார்

கவனமாக செய்தார்

இந்த விருந்தை முன்னின்று மேற்பார்வை செய்து ராமதாஸ் தயாரித்து இருக்கிறார். தனக்காக சமைக்கும் சொந்த சமையல்காரர்களை அவர் இதற்காக பயன்படுத்தி உள்ளார். வெளி ஆட்களை பயன்படுத்த கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக சமையல் செய்து இருக்கிறார்கள்.

வரவேற்பு

வரவேற்பு

அதேபோல் அதிமுகவினரை வரவேற்பதற்காக நிறைய கட் அவுட்களும் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைவர்களை புகழும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் புகழும் வகையில் இந்த கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.

English summary
PMK founder S Ramadoss prepares special dinner for the party to AIADMK members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X