விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ்ஸுக்கு உள்ளே.. வெளியே.. மேலே.. இது பஸ் டே அல்ல.. அபாயகரமான பயணம்.. வைரலாகும் வீடியோ

பள்ளி மாணவர்கள் ஆபத்தான பஸ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    விழுப்புரம் அருகே.. பள்ளி மாணவர்களின் ஆபத்தான பஸ் பயணம்-வீடியோ

    விழுப்புரம்: பஸ்சுக்கு உள்ளே, பஸ்சுக்கு வெளியே, பஸ்சுக்கு மேல, இப்படி.. பஸ்ஸையே மறைத்து கொள்ளும் அளவுக்கு பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

    பஸ் டே கொண்டாட்டத்தின்போதோ அல்லது ரூட் தல விவகாரங்களின்போதோ கல்லூரி மாணவர்கள் பஸ் கூரைகளில் ஏறி அராஜகம் செய்வார்கள்.

    School Students dangerous journey in the Gov Bus

    ஆனால், இப்படிப்பட்ட எந்த நிகழ்வுகளும் இல்லாமலேயே சில இடங்களில், பள்ளி மாணவர்கள், தினந்தோறும் அரசு பஸ்ஸில் இப்படித்தான் பயணம் செய்து வருகிறார்கள்.

    இப்படி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இப்படித்தான் தினமும் பஸ்ஸில் ஸ்கூலுக்கு போகிறார்கள். இவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை என கூறப்படுகிறது.

    விழுப்புரம் டிப்போவில் இது சம்பந்தமான மனு கொடுத்தும் சிறப்பு பஸ் எதுவும் இயக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழ்நாடு அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ராத்திரி நேரத்தில்.. காய் வாங்க கடைக்கு போன உமாதேவி.. கழுத்து அறுபட்ட நிலையில் மொட்டப் பாறையில்!ராத்திரி நேரத்தில்.. காய் வாங்க கடைக்கு போன உமாதேவி.. கழுத்து அறுபட்ட நிலையில் மொட்டப் பாறையில்!

    இந்த வீடியோவில், பஸ்ஸில் தொங்கும் மாணவர்களின் வயது 16, 17தான் இருக்கும். பஸ்சின் வெளியே இவர்கள் தொங்க, இவர்களுக்கு பின்னால் ஸ்கூல் பேக் தொங்க, மிகுந்த ஆபத்துடன் பயணிக்கிறார்கள். இவர்களது செருப்பு தரையில் பட்டு உரசும்படி காணப்படுகிறது.

    ஒரு மாணவர், ஜன்னல் கம்பிமேல் கால் வைத்து பஸ் கூரையை பிடித்து கொண்டு நிற்கிறார். இதில் ஒருவர் தங்களது பிடிப்பை விட்டால்கூட அவ்வளவும் ஆபத்துதான். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

    English summary
    School Students dangerous journey on government buses in Kakkanur near Vilupuram and This Video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X