விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்ரோட்டில் கொல்லப்பட்ட திருநங்கை அபிராமி.. 10 நாள் கழித்து துலங்கிய துப்பு.. 6 பேரை அள்ளிய போலீஸ்

திருநங்கை கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை.. உறைய வைக்கும் சம்பவம்! -வீடியோ

    விழுப்புரம்: கூட் ரோட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக விழுந்து கிடந்த திருநங்கை அபிராமியின் கொலை சம்பவத்தில் 10 நாட்கள் கழித்து 3 திருநங்கைகள் உட்பட 6 கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர்தான் பின்னாளில் அபிராமியாக உருமாறினார். திருநங்கை அபிராமிக்கு 35 வயசு. விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வந்துள்ளார்

    இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதாவது விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், பல காயங்களுடன் பிணமாக கிடந்தார் அபிராமி.

     பண பிரச்சனை

    பண பிரச்சனை

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தாலுக்கா போலீசுக்கு தகவல் தகவல் கொடுக்கவும், விசாரணை ஆரம்பமானது. அன்றைய தினமே 10 திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பணம் பிரச்சனை காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்றும், அதன்காரணமாகவே அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்றும் முதல்கட்டமாக சொல்லப்பட்டது.

    அபிராமி

    அபிராமி

    எனினும் போலீசார் உண்மை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டறியும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அபிராமியுடன் சென்ற புனிதா என்ற திருநங்கையை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் இந்த கொலை பற்றின பலல விஷயம் வெளியே வந்தது.

    புனிதா

    புனிதா

    புனிதாவின் சகோதர் ராணுவத்தில் வேலைபார்க்கிறாராம். அவர் அபிராமியை கல்யாணம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அபிராமிக்கு விருத்தாசலத்தில் ஒருவீடு கூட கட்டி தந்துள்ளாராம். தன் அண்ணனை கைக்குள் போட்டு கல்யாணம் செய்து கொண்டு, வீட்டையும் தன் பெயரில் எழுதி வாங்கி கொண்ட அபிராமியை பழிவாங்க முடிவு செய்துள்ளார் புனிதா.

     6 பேர் கைது

    6 பேர் கைது

    அதேபோல் பல்வேறு விஷயங்களில் கயல்விழி என்ற திருநங்கைக்கும் அபிராமியுடன் முன்விரோதம் இருந்திருக்கிறது. அதனால்தான் 2 பேரும் சேர்ந்து அபிராமியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி தங்களது ஆண் நண்பர்கள் 3 பேர், 2 திருநங்கைகளையும் இதில் கூட்டு சேர்த்து கொண்டு அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அபிராமியை கொன்ற 6 பேரையும் போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    English summary
    Six people including 3 transgenders have arrested in the Villupuram Transgender Abirami murder case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X