விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக, பாமக மட்டும் இன்றி இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில்.. முதல்வர் பழனிசாமி தகவல்-வீடியோ

    திண்டிவனம்: பாஜக, பாமக மட்டும் இன்றி இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க திண்டிவனம் வழியாக வந்த முதல்வருக்கு திண்டிவனம் புறவழிச்சாலை அருகே அமைச்சர் சிவி சண்முகம் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர், கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக தலைமையில் மெகா கூட்டணி பல்வேறு கட்சிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.

    வெற்றி பெற செய்யுங்கள்

    வெற்றி பெற செய்யுங்கள்

    அம்மா இருக்கும் போது எப்படி வெற்றி பெறச்செய்தீர்களோ, அதே போன்று நான் இல்லை யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற செய்ய வேண்டும். மத்திய நிதியில் போதுமான நிதியை பெற்று வளமான தமிழகமாக மாற்றுவதற்கு இந்த தேர்தல் மூலம் வெற்றி பெற வேண்டும். மத்தியில் போதுமான நிதியை பெற்று எதிர்காலம் தமிழகத்தில் வளமாக அமைவதற்கு அதிமுக வெற்றி பெற வேண்டும்.

    நயவஞ்சகர்கள்

    நயவஞ்சகர்கள்

    அம்மா மறைவுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் திமுகவினர் பல்வேறு வஞ்சக எண்ணத்துடன் பல்வேறு பழியை சுமத்தி வருகின்றனர். அம்மாவிற்கு நினைவு மணிமண்டபம் கட்டுவதற்கு பல்வேறு வழக்குகள் போட்ட நயவஞ்சகர்கள் திமுகவினர்.

    மேலும் சில கட்சிகள்

    மேலும் சில கட்சிகள்

    தலைவர் எம்.ஜி.ஆர் சொன்னது போல திமுக ஒரு தீய சக்தி. மத்தியிலே அதிமுக எதிரிகளை விரட்டியக்க வேண்டிய தேர்தல், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல். இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர இருக்கின்றன.

    லட்சக்கணக்கான வாக்குகள்

    லட்சக்கணக்கான வாக்குகள்

    அம்மா கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அதிமுக கூட்டணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

    English summary
    Chief Minister Palanisamy said that some parties would join With AIADMK Alliance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X