விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வழியெங்கும் தோரணம் இல்லை.. முதல்வர் படம் இல்லை..இது அரசு விழாவா?..ஆச்சரியபடுத்திய முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஆளும் கட்சி தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி அமைப்பது வழக்கம்.

நீண்ட காலத்துக்கு ஆட்சியில் அமர்ந்து முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர் மிகுந்த மரியாதையை எதிர்பார்ப்பது வழக்கம். எந்த நேரமும் பாதுகாப்பு படை பரிவாரங்கள் சூழ்ந்து நிற்க கெத்தாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தலைமைச்செயலாளர் சொன்னதால்.. ஆளுநர் தலையீடு இல்லை என நினைத்தோம்.. ஆனால்.. வெடித்த திருமாவளவன்! தலைமைச்செயலாளர் சொன்னதால்.. ஆளுநர் தலையீடு இல்லை என நினைத்தோம்.. ஆனால்.. வெடித்த திருமாவளவன்!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறார். அமைச்சர்களும், அதிகாரிகளும் தனக்கு சிறப்பு மரியாதை கொடுக்க வேண்டாம். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்தால் போதும் என்று கூறி இருந்தார். இதேபோல் தனது வாகனத்துடன் வரும் பாதுகாப்பு வாகனத்தையும் குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டார்.

 விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ்

விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ்

மேலும் அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களில் தனது படம் இருக்கவும் முதல்வர் விரும்புவதில்லை. சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தனது பாராட்டினை தெரிவித்திருந்தார். முதல்வரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வி

இந்த நிலையில் தமிழக்தில் 'இல்லம் தேடி கல்வி' என்ற மகத்தான திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 மூன்றடுக்கு பாதுகாப்பு இல்லை

மூன்றடுக்கு பாதுகாப்பு இல்லை

இந்த திட்டத்துக்காக நடைப்பெற்ற விழாதான் அனைவரையும் கவர்ந்துளளது. ஏனெனில் இந்த திட்டம் நடைபெற்ற மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் ஏதும் இடம்பெறவில்லை. இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும்போது மூன்றடுக்கு பாதுகாப்பு இல்லாமல் எளிய முறையில்தான் முதல்வர் வந்தார். முதல்வரை வவேற்க வழியெங்கும் தோரணம் இல்லை. எந்த பதாகைகளும் இல்லை. முதல்வர் கலந்து கொண்ட விழாவா இது? என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் சென்றனர்.

English summary
There is no way to distinguish the first. No banners. Is this a ceremony attended by the Chief Minister? The people of the area were amazed in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X