விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாறு காணாத வெற்றி... நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்... ராமதாஸ்

Google Oneindia Tamil News

திண்டிவனம்: வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜெ.குருவின் நினைவு தினத்தையொட்டி திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

The unprecedented victory, Wishes To Narendra Modi on behalf of PMK Says Ramadoss

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மிகப்பெரும்பான்மையான அளவில் இந்திய மக்கள் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். 2 வது முறையாக பிரதமராகும் அவருக்கு, பாமக சார்பாக வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.

மோடி மீண்டும் பிரதமரானது உலகத்துக்கே கெட்ட செய்தி.. வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள் மோடி மீண்டும் பிரதமரானது உலகத்துக்கே கெட்ட செய்தி.. வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்

பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் ராமதாஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே, இரண்டாவது முறையாக மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர் ராமதாஸ்,

மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என நம்புவதாகவும், இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறினார்.

English summary
Ramadoss Said that The unprecedented victory, Wishes To Narendra Modi on behalf of PMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X