விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏசி இயந்திரம் வெடித்து சிதறல்.. 3 பேர் பலியில் நீடிக்கும் மர்மம்.. விபத்தல்ல கொலை என பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கூலிப்படையை ஏவி மூத்த மகனே குடும்பத்தை தீர்த்துக்கட்டியது அம்பலம்!

    திண்டிவனம்: மின்கசிவால் ஏசி இயந்திரத்தில் கேஸ் கசிந்து 3 பேர் பலியான சம்பவத்தில் அக்கா குடும்பத்தினரை யாரோ கொலை செய்துவிட்டதாக உறவினர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    திண்டிவனம் அருகே காவேரிபட்டினத்தை சேர்ந்தவர் ராஜி. இவர் அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி (52). இவர்களுக்கு கோவர்த்தனன், கவுதமன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

    There is mysterious in 3 died in Tindivanam by AC burst out

    கோவர்த்தனனுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் கவுதமனுக்கு வரும் ஜூன் 6-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகளில் குடும்பமே இறங்கியுள்ளது.

    இந்த நிலையில் வழக்கம் போல் திருமண ஏற்பாடுகளை முடித்துவிட்டு ராஜூ, மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதம் ஆகியோருடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் நேற்று முன் தினம் உறங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது மற்றொரு அறையில் கோவர்த்தனனும் அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் இயந்திரம் வெடித்ததில் 3பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

    இந்த நிலையில் சப்தம் கேட்டு கோவர்த்தனனும் அவரது மனைவியும் ராஜூவின் அறைக்கு சென்றதில் அவர்களும் மயங்கினர். இதையடுத்து அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ராஜூவின் உடலில் ரத்த கறை இருந்ததால் இது விபத்தல்ல கொலை என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ராஜூவுக்கு அதிக சொத்து இருப்பதால் சொத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    ஜாலிக்கு அழைத்த மீன் வியாபாரி... கண்டந்துண்டமாக வெட்டி ஜோலியை முடித்த பெண் குடும்பம் ஜாலிக்கு அழைத்த மீன் வியாபாரி... கண்டந்துண்டமாக வெட்டி ஜோலியை முடித்த பெண் குடும்பம்

    உண்மையிலேயே ஏசி இயந்திரம் வெடித்துதான் மூவரும் இறந்தனரா என கண்டறிய ஏசி பழுது நீக்கும் நிபுணர் கொண்டு ஆராயப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூன்று பேரும் ஏசி வெடித்து பலியாகவில்லை என்றும் யாரோ கொலை செய்துவிட்டதாகவும் கலைச்செல்வியின் சகோதரர் ஜெயசங்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயசங்கர் கூறுகையில் எனது அக்கா குடும்பத்தினர் இறந்தது விபத்தல்ல. அவர்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். எனவே எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    3 died of ac burst incident in Tindivanam is not an accident, its a murder, says demised Kalaiselvi's brother.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X