விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஆக.15முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய பானங்களை விற்க மாட்டோம்.. வணிகர் சங்க பேரவை

Google Oneindia Tamil News

விழுப்புரம்: தமிழகத்தில் ஆகஸ்ட் 15முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த போது, கோக் பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

tn trade association announced we will not sell coke and pepsi from august 15th in tamilnadu

ஜல்லிக்கட்டு தடைக்கு அமெரிக்காவை குற்றம்சாட்டி, கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்கக்கூடாது என்றும், இந்திய குளிர்பானங்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களிலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் பெரும் குரல்கள் எழுந்தன.

அடுத்தடுத்த நாட்களில் திமுகவுக்கு திடீர் நெருக்கடி.. விஸ்வரூபம் எடுக்கும் 3 சவால்கள் அடுத்தடுத்த நாட்களில் திமுகவுக்கு திடீர் நெருக்கடி.. விஸ்வரூபம் எடுக்கும் 3 சவால்கள்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைக்கு வணிக அமைப்புகள் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பதற்கு தடை விதித்தன. இதனால் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை படுபாதள நிலைக்கு அப்போது சென்றது.

இதையடுத்து மத்திய அரசிடம் பெப்சி நிறுவனம் முறையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின்னர் சிறிது காலத்திற்கு பின் மெல்ல மெல்ல, அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை தமிழகத்தில் ஆரம்பம் ஆனது.

இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தமிழகத்தில் ஆகஸ்ட் 15முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்றார்.

English summary
tn trade association leader vellaiyan says, we will not sell coke and pepsi from august 15th in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X